Tuesday, 23 July 2013

மறைவாய் சொன்ன கதைகள் 12

ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாராம். அவருக்கு ஒரு மவன் கல்யாண வயசுல இருந்தான். ராசா அவனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு அவன் கிட்ட பேசினாரு. மவனோ இப்போ வேணாம் அப்போ வேணாம்னு இழுத்துக்கிட்டே வந்தான். அவன் மனசுல என்னமோ இருக்குனு ராசா கண்டுக்கிட்டாரு. உடனே தன் மந்திரிய கூப்புட்டு, இந்த மாதிரி இந்த மாதிரி , நீங்கதான் பேசி என்னன்னு கேக்கனும்னு கேட்டுக்கிட்டாரு. மந்திரி நல்ல வயசாளி. அது மட்டுமில்லாம இளவரசன சிறு பிள்ளைல தூக்கி வளர்த்தவரு. சரின்னுட்டு போயி இளவரசன்ட்ட பேசினாரு. முதல்ல இல்ல அது இதுன்னவன் , அப்புறம் சொன்னான் "ஐயா எனக்கு நாலு தனங்கள்(மார்பு) உள்ள பொண்ணு வேணும, முன்னாடி ரெண்டு பின்னாடி ரெண்டு". நேரா வந்து ராசா கிட்ட சொன்னாரு மந்திரி. இதென்னடா கோட்டிக்காரத்தனமா இருக்கு, என் வயசுல ரெண்டுக்கு மேல பாத்ததே இல்லயேனுட்டு, "என்னால தேட முடியாது, அவனையே தேடிக்க சொல்லுங்க"னு சொல்லிட்டாரு.



சரீன்னு இளவரசன் கிளம்பி ஊர் ஊரா சுத்தறான். சரீ... ஏன் அவன் நாலு கேட்டான்? அதுக்கு ஒரு காரணம் இருக்கு. ஒரு நா கனவுல ஒரு குளத்தோரமா கொலுசு சத்தம் கேட்டுச்சு, ஒரு பொண்ணு குளிச்சிட்டு இருந்தா. அவ முதுகுல ரெண்டு தனம் இருந்துச்சு. படக்குன்னு முழிச்சுக்கிட்டான். இவனே நினைச்சிருக்கான் பல தடவ இப்படி நாலு இருந்த சில சமயங்கள்ளே உதவுமேனு. அப்போ தீர்மானிச்சான்.



குளக்கரை, ஆத்தங்கரைனு தேடினான். ரெண்டு உள்ளதை கண்டு பிடிக்கறதே அரிதா இருந்துச்சு. அரை, முக்கால்னு இருக்கு. ஒரு நா களைப்புல மரத்து மேலேயே தூங்கிட்டான். அப்போ கனவுல வந்தா மாதிரியே கொலுசு சத்தம் கேட்டுச்சு. முழிச்சுப் பார்த்தான். அப்போ குளக்கரைல ஒரு பொண்ணு குளிச்சிட்டு இருந்தா, முதுகுல ரெண்டு தனம். மொதல்ல கனவோன்னு நினைச்சான். அப்பறம் நினவுனு உறுதி செஞ்சுகிட்டு. கீழே எறங்கி ஒளிஞ்சுக்கிட்டான். அந்தப் பொண்ணு குளிச்சுட்டு துணியை எல்லாம் சுத்திட்டு வந்தா. பின்னாடியே போன இளவரசன் வீட்டை கண்டுகிட்டான்.



நேரா ராசா கிட்ட வந்து சொன்னான். பொண்ணு எடம் கொஞ்சன் ஏழை தான் ஆனாலும் பய புடிச்சு இருக்கானேனு சரீனுட்டார். கல்யாணம் ஆச்சு. மொத ராத்திரில ஆர்வத்த அடக்க முடியாம இளவரசன், பொண்ணு வந்த உடனே கட்டி புடிச்சு, பின்னாடி தடவினான். ஒண்ணுத்தயும் காணோம். 'எங்கடி?' ன்னான். 'என்னாதுங்க?'ங்கறா இவ. இவன் சொன்னான் அதுக்கு அவ' ஆட்டுக்கு பின்னாடி வாலு மனுசனுக்கு முன்னாடி பாலு இல்லயா, அதுக் கூடத் தெரியாதா?' ன்னா. 'நா பாத்தேன்ங்கிறான் இவன். அவ கிட்ட முழுசா எல்லாத்தயும் சொன்னான். அதுக்கு அவ ' ஓ அதுவா, நா குளிக்கும் போது நல்லா வயரெல்லாம் தேய்ச்சு குளிப்பேன், அது இடஞ்சலா இருக்குமேனு தூக்கி பின்னாடி போட்டுடுவேன், அத தான் நீங்க பாத்தீங்க' னா.

----

உயிர்மை பதிப்பகம் வெளியிட்டு இருக்கும் கி.ராஜநாரயணன் மற்றும் கழனியூரான் தொகுத்து இருக்கும் 'மறைவாய் சொன்ன கதைகள்'ல் மேலே உள்ள கதைகள் போல அட்டகாசமான 101 கதைகள் இருக்கின்றது. கதையை என் ஞாபகத்திலிருந்த வரையில் எழுதியிருக்கிறேன்

LINK:http://modumutti.blogspot.in/2010/05/blog-post_28.html

மறைவாய் சொன்ன கதைகள் 11

எங்க ஊரு பக்கம் ஒரு பழக்கம். ஒரு பழக்கமில்ல ஓராயிரம் பழக்கம். எங்க ஊருல மட்டுமில்லாம உலகம் பூரா அங்கங்க ஆயிரமாயிரம் பழக்கம்.அதுல ஒண்ணு கதை சொல்லுறது. பாட்டி வடை சுட்ட கதை, காக்கா தண்ணி குடிச்ச கதையெல்லாம் எழவு எவனுக்கு வேணும்?

'அப்படி'ப்பட்ட கதையெல்லாம் கேட்டு இருக்கீங்களா? என்ர வயசுப் பசங்களக் கேட்டுப்பாருங்க. கதையே சொல்லத்தெரியாது, இந்த லட்சணத்துல வெவகாரமா ஒண்ணச் சொல்லி அத மொகஞ் சுளிக்காத மாதிரி சொல்லத் தெரியுமா?

எங்க தாத்தன் பொழப்பு கெட்ட நேரமெல்லாம் யோசிச்ச கதைக, அவஞ்சோட்டு ஆளுங்க அமுக்கமாப் பேசுன கதைக எல்லாஞ் செத்துப் போச்சா?
*****
"ம‌றைவாய் சொன்ன‌ க‌தைகள்". ந‌ம்ம கி.ராவும், க‌ழ‌னியூர‌னும் கேட்ட‌ க‌தைக‌, சுத்தி சுத்தி சேர்த்த‌ க‌தைக.

நூறுக‌தைக. அத்த‌னையும் வெவ‌கார‌மான‌ க‌தைக‌,சுளுவாவும் இருக்குது, சொகமாவும் இருக்குது.

நூறு க‌தைக‌ளும் அம்ச‌மா இருக்குதான்னு கேட்டா இல்லைன்னுதான் சொல்ல‌ணும். அம்ப‌த‌றுப‌து க‌தைக‌ அட்ட‌காச‌ம், இருவ‌து க‌தை ந‌ல்லா இருக்குது. மீதிக் க‌தைக‌ த‌ப்பிப் போச்சு.

ஒரு க‌தைய சுருக்க‌மாச் சொல்லுட்டா?
ஒரு ராசாகிட்ட‌ ஒரு வேல‌க்கார‌ன், அச‌ப்புல‌ ராசா மாதிரியே இருக்கான். எல்லோருக்கும் ஆச்ச‌ரிய‌ம‌னா ஆச்ச‌ரிய‌ம். ராசாவுக்கு ஒரு ச‌ந்தேக‌ம், ந‌ம்ம‌ அப்ப‌ன் தான் ஏதோ வெவகார‌ம் பண்ணி இருக்கான்னுட்டு. வேலக்காரன‌ கூப்புட்டு வில்ல‌ங்க‌மா சிரிச்சுட்டு கேட்டாரு. உங்க‌ ஆத்தா இங்க‌ வேலை செஞ்சாளான்னு, வேல‌க்கார‌ன் சொன்னாமா, "இல்ல‌ ராசா. எங்க‌ப்பன் தான் அர‌ண்ம‌னைல வேல‌ செஞ்சான்"ன்னு. புரியுதா சேதி?

இப்ப‌டித்தான் பாத்துக்குங்க‌. சில‌ க‌தைக ம‌ற‌ச்சு ம‌ற‌ச்சு பேசுனா, சில‌ க‌தைக ப‌ச்சையா பேசுது. உங்க‌ தாத்த‌னும்,என்ர‌ தாத்த‌னும் லேசுப்ப‌ட்ட‌வ‌னுக‌ இல்ல‌. அது ம‌ட்டும் தெளிவா தெரியுது. பாட்டிக‌ளையும் சேத்துக்குங்க‌.
*********
இல‌க்கிய‌ப்பூர்வ‌மாக‌வோ அல்ல‌து வ‌ர‌லாற்றுப் பார்வையிலோ நோக்கும் போது, இந்த‌ப் புத்த‌க‌த்தின் தொகுப்பாளர்க‌ளிருவ‌ரும் செய்த காரியம் மிக முக்கியமானது. இத்த‌கைய‌ அழிவின் விளிம்பு நிலை இல‌க்கிய‌க் கூறுக‌ளை ஆவ‌ண‌ப்ப‌டுத்தியிருப்பது பாராட்டுக்குரிய‌து. சிறப்பாக வடிவமைத்திருக்கும் உயிர்மை ப‌திப்ப‌க‌த்திற்கும் வாழ்த்துக்க‌ள்.

க‌தைக‌ளைச் சொல்லிவிடுவ‌தோடு ம‌ட்டுமில்லாம‌ல், அந்த‌க் க‌தையினை சொல்லும் போக்கிலேயே, அந்த‌க் கால‌க‌ட்ட‌ம், வாழ்விய‌ல் முறைக‌ள், பெண்க‌ளின் நிலை போன்ற‌வ‌ற்றை சொல்லிச் செல்கிறார்க‌ள்.

இத்த‌கைய க‌தைகள் ச‌மூக‌த்தில் அங்குமிங்குமாக‌ உல‌வி வ‌ந்த‌ போதிலும், எழுத்து வ‌டிவ‌மாக‌ ஆவ‌ண‌ப்ப‌டுத்தி முன் வைக்க‌ தைரிய‌மும், க‌தையின் அச‌ல் த‌ன்மை மாறாம‌ல் ம‌றுவ‌டிவாக்க‌ம் செய்ய‌ திற‌மையும் அவ‌சிய‌ம்.
அனுப‌வ‌ப்ப‌ட்ட‌ எழுத்தாள‌ர்களான கி.ராவும், கழனியூரனும் இந்த‌ இர‌ண்டு அம்ச‌த்திலும் எந்த‌க் குறையும் வைக்க‌வில்லை.
******
பாலிய‌ல் க‌தைகள் நாட்டுப்புற பாலியல் கதைகள் ம‌ற்ற‌ எந்த‌ இல‌க்கிய‌க‌ வ‌கைக்கும் எந்த‌ வித‌த்திலும் குறைந்த‌வைய‌ல்ல‌ என்ப‌த‌னை மீண்டும் ஒரு முறை அழுத்த‌மாக‌ப் புரிந்து கொள்கிறேன்
LINK:http://www.nisaptham.com/2007/04/blog-post_2656.html

மறைவாய் சொன்ன கதைகள் 10

தவளையும் பாம்பும்

வேசி ஒருத்தி தினமும் ஒரு குளத்தில் குளிக்கப் போவா. அந்தக் குளத்துல தவளைக நிறைய்ய இருந்தது.

தவளைக நிறைய்ய இருந்ததுனால அதுகளைப் பிடிச்சித் தின்ன பாம்புகளும் நிறைய்ய வந்தது. பாம்புக வந்து தவளைகளை பிடிச்சித் திங்க ஆரம்பிச்சதும் தவளைகளுக்கு ரொம்ப பயமாப் போச்சி. அதுகளுக்கு என்ன செய்யிறதுன்னுட்டுத் தெரியல. எங்கன போயி ஒளியறதுன்னுட்டுந் தெரியல. அதுகளோட நிலமை ரொம்பப் பரிதாபமா ஆயிட்டது.

இவ தலைக்கு சீய்க்கா போட்டுத் தேச்சிக் குளிக்க, தண்ணிக்குள்ள முங்குன ஒரு படிக்கட்டுல வசமா உக்கார்ந்துகிட்டு கண்ணுல சீய்க்க விழுந்துராம இருக்க கண்ண மூடிக்கிட்டு தலையைத் தேய்ச்சிக்கிட்டிருக்கா.

அந்த சமயத்துல ஒரு தண்ணிப் பாம்பு ஒரு தவளைய விடேன் தொடேன்னு முடுக்கிட்டு வருது. கடோசியா தவளைக்குத் தப்பிக்க ஒரு வழியுந் தெரியல.

இவ கால அகட்டி உக்காந்து தலெ குளிச்சிட்டிருந்தாளா, அது பாட்டுக்குப் போயி இருந்துக்கிட்டது. பாம்புக்குப் பார்வை தவளை மேல. அதனால தவளையங் காங்கலங்கவும் அது திரும்பி போயிட்டது. தவளைக்கு இப்பதாம் உயிரு வந்தது. இம்புட்டுப் பாதுகாப்பா, குளிருக்கு அடக்கமா ஒரு இடம் கிடைக்கும்னு அது கனவுலயும் நெனக்கல.

சரி. இதுலயே இப்படியே இருப்போம்னு இருந்துக்கிட்டது. அந்தத் தவளையப் பிடிக்க அதெ வெரட்டிக்கிட்டு வந்த பாம்புக்கு ஒரு சந்தேகம் வந்துட்டது. அதுக்குள்ள இந்தத் தவள எங்கிட்டுப் போயிருக்க முடியும்ன்னுட்டு.

ஒரு வேள இதுக்குள்ள இருக்கலாமோன்னு தலைய நுழைச்சிப் பாத்தது.உசாரா இருந்த தவளை இத எதிர்பார்த்து இருந்ததால இன்னும் உள்ளுக்குப் போயி வசமான இடத்துல பதுங்கியிருந்துக்கிட்டது. உள்ள நுழைஞ்சி பாத்த பாம்புக்கு ஒரே இருட்டா இருந்ததுனால ஒண்ணுந் தெரியல. அதனால தலைய வெளிய இழுத்துக்கிட்டு வேற தவளையப் பாப்பம்னு போயிட்டது.

பாம்பு போயிட்டதுன்னு உறுதியாத் தெரிந்த பிறகு தவளை மெள்ள வெளியே வந்துட்டது.

உயிரு தப்பியதை நினைத்து அதுக்கு ஒரே புல்லரிப்பு நிறைந்த தாங்க முடியாத மகிழ்ச்சி.

இந்த மகிழ்ச்சியை தனது சேக்காளித்தவளையிடம் போய்ச் சொன்னது. நடந்ததை அப்பிடியே சொல்லி, பாம்பு உள்ளே வந்து தேடியதையும் தன்னைப் பிடிக்க முடியலைன்னு சொல்லிவிட்டு-

ஹ..! அந்த இடம்; ரொம்ப அருமையான இடம் ஒளிய. நீயும் அதப் போய்ப் பாக்கணும். பாத்து வச்சிக்கிட்டா பாம்புக வெறட்டும்போது போயிப் பதுங்கிக்கலாம்னு சொன்னதும் இந்தப் பயித்தியாரத் தவளை உள்ளே போயிப் பாக்கிறதுக்கும் அவ குளிச்சி எழுந்திருக்கிறதுக்கும் சரிய்யாக இருந்தது.

அடடா உள்ள மாட்டிக்கிட்டமே. சரி. நாளைக்கு இந்நேரந்தாம் வெளியே வர முடியும்னு கம்முனு பதுங்கி இருந்துக்கிட்டது.

அதேபோல மறுநா அவ அந்த குளத்துக்கு தலை குளிக்க வந்து தண்ணீர்ப் படியில உக்காந்து தலெயெத் தேச்சிக் குளிச்ச போது தவளை தப்பிச்சேன் பிழைச்சேன்னு பாஞ்சி வெளியே வந்திட்டது. சேக்காளித்தவளெ என்னடா இவம் போனவனெக் காங்கலயே; பாம்புதாம் முழுங்கிருச்சோன்னு கவலையா இருந்த சமயம்; இது அதெத்தேடி வந்தது சிரிச்சுக்கிட்டே.
என்னப்பா என்ன ஆச்சி; எப்பிடி இருந்ததுன்னு மற்ற தவளை கேக்க…

அய்யோ! அதெ ஏங் கேக்கெபோ; ஒரு பாம்பா ரெண்டு பாம்பா எத்தென பாம்புங்கிற; விதவிதமா வருதப்போவ்! நானும் பாத்ததுலயும் பாத்தேன்; இப்படிப் பாம்புகளைப் பாத்ததில்லப்ப, வார சனியன் எட்டிப் பாத்துட்டு, இல்லேன்னு தெரிஞ்சதும் போக வேண்டியதுதானே. ரொம்ப சந்தேகம் பிடிச்ச பாம்புகப்பா. மாறி மாறி மாறி மாறி வந்து வந்து பாக்குதுங்கெ.

நா அம்புடுவேனா. எவ்ளோ எடம்கிற. நம்ம குளத்துத் தவளயெல்லாம் போயி இருந்துக்கிறலாம். அப்பேர்க்கொத்த பெரிய இடம் அது என்று பெருமை பீத்திக்கொண்டது அந்த தவளை. அப்படியா சங்கதி. நா நாளைக்குப் போயி பாத்துட்டு வந்துரணும். அதெ என்று சொல்லிக் கொண்டது மற்ற தவளை

மறைவாய் சொன்ன கதைகள் 9

நீர்முள்ளு

கதை சொல்லத்தொடங்கியதும் பெரியவருக்கு சிரிப்பாணி அள்ளியது. பேச்சு முதலில் நீர் முள்ளுச்செடி பற்றி வந்தது.  நான் அதைப் பார்த்ததில்லை என்றேன்.

அய்யோ அது கெட்ட கழுதெயில்லா; அது பண்ணுன கூத்தைக் கேளுங்க என்று தொடங்கினார் பெரியவர்.


‘இப்படித்தாம் பாருங்க, எங்க ஊர்ல ஒரு ‘செவ்வாளப்பய’ சரியான வெடுவாச்சுட்டி. எருமை மாட்ட மேய்ச்சுட்டு வந்து தண்ணியில அடிச்சாம்.

எருமக் களுதைக தண்ணிக்குள்ள எறங்கினா சாமானியமா வெளியேறுமா சவம். அத வெளியேத்துததுக்குள்ளே மனுசம் படுற பாடு…குளத்து கரையில ஒத்தக் கல்லு காங்க முடியாது. சுத்தி சுத்திப் பெறக்கி எரும மாட்டே எறியதேம்னு சொல்ல.

தண்ணிக்குள்ள வீசிக்கிட்டே இருந்தா எங்கென இருக்கும் கல்லு!

பய..நல்லா வேகமா நீஞ்சுவானாம். எல்லாத்தையும் களைஞ்சு எறிஞ்சுட்டு, நாளு வெரல் அகலத்துல உள்ள கோமணத்த மட்டும் வச்சுக்கிட்டு தண்ணிக்குள்ள பாஞ்சாம். அந்த இடத்துல தண்ணீக்குள்ளார 'நீருமுள்ளுச் செடி' இருந்தது அவனுக்குத் தெரியாது.

கோமணத்துல ‘சுருக்’குன்னதும் சுள்ளாச்சுருக்குதாம் போலிருக்குன்னு நெனச்சு கவனிக்காம விட்டுட்டாம்.(சுள்ளாஞ்சுருக்கு – துணிகளின் மேல் ஒட்டிக் கொள்ளும் ஒருவகை புல்லின் விதை. துணியின் மீது ஒட்டிக் கொண்டு அசைவின் போது சுருக்கென்று உடம்பில் தைக்கும். இதனால் கெடுதி இல்லை; உபத்திரவம்தான்)

இந்த நீர்முள்ளுச் செடியோட முள்ளு, ரோமத்தை விட கொஞ்…சம் கனம்; அவ்வளவுதான். மஞ்சள் நிறத்துல இருக்கும். பய நிறமும் மஞ்சள்; அதனால் ஒண்ணும் தெரியல சரியா. அதோட நல்ல விளையாட்டுப் பருவம்; கக்கத்துலல்லாம் அப்பத்தாம் ரோமம் முளைக்கிற வயசுன்னு வச்சுக்கிடுங்களேம்.

ஒரு நாளாச்சி, ரெண்டு நாளாச்சு, மூணு நாளாச்சு பொதுபொதுண்ணு வீங்கிருச்சு. கோமணம் வய்க்க முடியல! பய மேலுக்கு குதுகுதுன்னு வந்துட்டு.
யாரிட்ட காணிப்பான், காணிக்க கூடிய இடமா?அண்ணைக்கி பெயலால மாட்டுக்குப் போக முடியல. இழுத்து மூடிப்படுத்துக்கிட்டு முக்கிக்கிட்டு மொனங்கிக்கிட்டும் கெடக்காம்.

ஏலே; எந்தி; நேரங்காணாதான்னு அவம் வீட்டுத்தாத்தா வந்து உசுப்பினாரு. தாத்தாகிட்ட கொஞ்சம் ஒட்டுதல் உண்டும் இவனுக்கு.
மெண்ணு மெண்ணு முழுங்கி ஒருபடியா இப்படி சங்கதின்னிட்டு சொன்னான்.
எங்கலே பாப்பம்னுட்டு பாத்தா…பெரிய மஞ்ச முள்ளங்கீக்கிழங்கு கணக்கா வீங்கிக் கிடக்கு! கண்ணாடியா மின்னுது.

அட பெயித்தியாரப்பயலே, ஆரம்பத்திலேயே சொல்லப்படாதா, இப்பிடி வீங்கிப்போச்சே, உழுவ மீனு மாதிரியில்ல ஆயிட்டுன்னு சொல்லி, பெயல கட்டுல்ல படுக்க வச்சி. பக்கத்து ஊருக்கு கொண்டு போனாவ.

பக்கத்து ஊருல, ‘பார்வை’ பாக்குதவரு இருக்காரு. இவுக போன நேரம் அவரு இல்லே. அவரோட சம்சாரந்தான் இருந்திச்சு. அந்தம்மாவும் ‘பார்வை’ பாக்கும்.

வர்றவுகளுக்கு அவதான் பார்வை பாத்துக்கிட்டிருந்தா. இவனோ வெடலைப் பெய; பொம்பளையிட்ட எப்டிக் காண்பிக்கிறதுன்னுட்டு தாத்தாவுக்கு யோசனை. சரி என்ன செய்ய. ஆபத்துக்குப் பாவமில்லன்னுட்டு அவகிட்ட இப்பிடி இப்பிடி சங்கதி; ‘நோக்காதண்டி’ ஆயிட்டது. நீங்கதாம் பாக்கணும்னு சொன்னாரு தாத்தா.

அதுலயா முள்ளு குத்தியிருக்கு. அதாம் அப்பிடி வீங்கியிருக்கு. அப்படீன்னா... நீங்க வேற ஆளத்தான் பாக்கணும்னு சொல்லிட்டா.

அம்மா தாயி ஒரு பக்கமும் தூக்கிட்டுப் போக முடியாது. இங்க கொண்டாந்ததே பரவாயில்ல. நீங்கதாம் காப்பாத்தணும்னு கால்லே விழாத குறையாக் கெஞ்சினாரு. அவ கிழவின்னாலும் குத்தமில்ல. கொஞ்ச வயசுக்காரி. கிழவனார் தாத்தா சொன்னதுல இருந்து மனசுக்குள்ள ‘நோக்காத் தண்டியா…நோக்காத்தண்டியா – அப்பிடின்னா பாக்கணுமே அதன்னு ஆசை!

சரி கொண்டாங்கன்னா.

கட்டுலோட தூக்கிட்டு வந்தாங்க. பயலெப் பாத்தா. பாத்ததுமே பிடிச்சுப் போச்சு. சரி இருக்கட்டும்னு நெனச்சி, தன்னோட கண்ணெ துணியால கட்டிக்கிட்டு, அவனோட கண்ணெயும் கட்டச் சொல்லிட்டு வேப்பங் கொழய சுழத்தி வீசி வீசி மந்திரம் சொல்ல ஆரம்பிச்சா.

மந்திரம் வர்றதுக்கு பதிலா வாய்லேர்ந்து நோக்காத்தண்டி நோக்காத்தண்டின்னுட்டுதான் வருது!

அய்யோ நோக்காதண்ணியா அத நாம் பாக்கணுமேன்னுதான் மந்திரம் வருது.

ஒன்றரை மணிநேரம் வேப்பங்கொழை அடிச்சாச்சி! மந்திரமும் ஓதியாச்சு.

வீக்கங் குறைஞ்சிருக்கா; வலி நின்னுருக்கான்னு கேட்டா.

வீக்கங் கொறயல. வலியும் நிக்கலேன்னு சொன்னதும் ‘சரி இதுக்கு வேற பக்குவங்தாம் செய்யணும். எல்லாரும் முதல்ல சத்தோடம் வெளியே நில்லுங்கன்னா. எல்லாரும் வெளியேப் போயாச்சு. கதவ ஒருச்சாச்சு வச்சிக்கிட்டா. தன்னோட கண்கட்ட அவுத்துட்டு, ஒரு ‘கோழி ரோமம்’ எடுத்தா.

வீங்குனதும்பேர்ல அப்படியோ பட்டதும் படலையோன்னு  மேலும் கீழுமா ரோசுனா. அந்த வலியிலேயும் பயலுக்கு அப்படியே சொகமா இருக்கவும் கொஞ்சங் கொஞ்சமா 'உசுருத்தலத்துக்கு' உசுரு வர ஆரம்பிச்சது. விரிய விரியவும் சலம் தன்னப்போல ஒடஞ்சு வெளியேறவும் பயலுக்கு வலிக்கவும் செய்யுது. சொகமாவும் இருக்கு. அப்பிடியே பெறத்தால கையிரண்டையும் கட்டில் சட்டத்துல ஊனிக்கிட்டு முக்குதாம் மொனங்குதாம்;

மறி மோத்திரத்த குடிச்ச கெடாக்கணக்கா சத்தங் கொடுக்காம்! வெளியில நின்ன தாத்தாவுக்கு வாயெல்லாம் பல்லு!! சலத்தோட முள்ளு வெளியில வாரது மாதிரி அவருக்கு மனசுல தோணுது.

ஆனா இங்க செலந்தா வந்திருக்கு. முள்ளெக் காணோம். முக்காவாசி செலம் வந்திட்டதும் பயலுக்கு வலி குறைஞ்சிட்டது. முள்ள இனி பிதுக்கித்தாம் எடுக்கணும். உயிர்த்தலத்த பிதுக்கினா தாங்கமாட்டாம். திரும்பவும் கோழி ரோமத்தால தடவிக்கொடுத்தா. பிறவு அப்படியே நாக்கால தடவவும் பயலுக்கு வலிக்கு சூடா ஒத்தனங் கொடுத்த்து போல எதமா இருந்திச்சு. முள்ளு வர்ற மாதிரித் தெரியல. பல்லுபடாம பதனமா வலி தெரியாம இதமா சுவைச்சு உறிஞ்சி துப்புனா. சின்ன ரோமத்தண்டி விழுந்து கிடந்த்து. இப்ப எப்பிடி இருக்குன்னு கேட்டா.

செத்த தேவலன்னாம்

எப்பிடித் தச்சது முள்ளுன்னு கேட்டா

வெவரம் எல்லாத்தையும் ஒண்ணு விடாமச் சொன்னாம். ஒரு முள்ளுதாம் தச்சதாம்னு கேட்டு எல்லாப்பக்கத்தையும் பாத்தா.

தாத்தா சொன்னது சரிதாம்னு பட்டது  அவளுக்கு

இது விச முள்ளு. இன்னும் நாலு நேரமாவது மந்திரிக்கணும். போயிட்டு மூணாம்பக்கம் வான்னு சொல்லி ஒரு பச்சிலையை அறைச்சிப் போடுன்னு சொல்லிக் கொடுத்தா.

இப்ப வலியில்ல. ஆனாலும் மூணாம் பக்கம் மந்திரிக்கப் போனோம்.
விச முள்ளுல்லா. கூடவே நாலு தரம் மந்திரிச்சாம்.

மந்திரிக்க மந்திரிக்கதாம் தெரிஞ்சது நீர் முள்ளோட அருமை அவனுக்

மறைவாய் சொன்ன கதைகள் 8

வெத்திலைக்கு 'அந்த' வாசம்
வெற்றிலையை முகர்ந்து பார்த்திருக்கிறீர்களா...ஒரு வித மணம் வீசுமே...அது எந்தமாதிரியான என்று ஒரு நாட்டுப்புற கதை இருக்கிறது. நம்ம கி.ராஜநாராயணனோட நாட்டுப்புறகதைகள் 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' புக்லே இருந்து....(நீலக்குயில் பதிப்பகம்). ஒரு புராண-நாட்டுப்புற புனைவு


    வெத்திலைக்கு ‘அந்த வாசம் எப்படி வந்தது தெரியுமா?
    தாத்தா கேட்டார்.

    எந்த வாசம்?

    வெற்றிலைக் கட்டிலிருந்து ஒரு வெற்றிலையை உருவி எடுத்து, அவரும் முகர்ந்து பார்த்து எங்களுக்கும் தந்தார்.

    முகர்ந்ததும் ‘ஒரு வாசனை’ வீசியது! ஒரு மனுஷப் பெண் அடி உடம்பின் வாசம். அதைத் திரும்பவும் முகர்ந்து பார்த்ததில் மேலும் தெளிவு கிடைத்தது.


    தாத்தாவை ஓரக் கண்ணால் பார்த்தேன். இந்தக் கிழவனை என்ன செய்ய என்று தோன்றியது! எத்தனை தடவை வெத்திலை போட்டிருப்போம். இதை நாம் அறியலையே. பெண்டுகளின், முக்கியமாக குமரிப்பெண்டின் இந்த ‘மணத்தை’ இந்தக் கிழம் அறிந்த விந்தை எது?

    இப்போது நாம் யூகித்து அறிந்த இந்த முடிவும் சரியானதுதானா?
    இப்படித் திகைத்துக் கொண்டிருந்த வேளையில் தாத்தா அதன் கதையை ஆரம்பித்தார்.

    இந்திரனுடைய விருந்தாளியாக அர்ச்சுனன் தேவலோகத்துக்குப் போயிருந்தான். அப்போ அவன் பிரம்மச்சரிய விரதம் பூண்டிருந்த நேரம். ரொம்ப நாளாய் அவனை, தேவலோகத்துக்கு வந்து தன்னோட விருந்தினனாகக் கொஞ்ச நாள் தங்கி இருந்துவிட்டுப் போகும்படி சொல்லி வேண்டிக் கொண்டே இருந்தான் இந்திரன். ஆனால் அவன் போய்ச் சேர்ந்த்தோ இப்படி பிரம்மச்சரிய விரதம் இருக்கும் நேரமாகப் பார்த்து அமைந்து விட்டது.

    தேவலோகத்தில் அவன் எல்லா இன்பங்களையும் அனுபவித்துப் பார்க்கலாம்; பெண் சமாச்சாரத்தை மட்டும் ஏறெடுத்தும் பார்க்க முடியாது. தன்னுடைய பையனுக்கு இந்த சமயமாகப் பாத்து இப்படி அமைந்து விட்டதே என்று தேவராஜனான இந்திரனுக்குக் கொஞ்சம் வருத்தம் தான்!

    தேவலோகத்திலுள்ள பேரழகிகளான நாட்டியமாதர்களுக்கு- ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலான பெண்டிருக்கு – தேவலோகத்திலுள்ள முனிபுங்கவர்கள், தவசிகள், ரிஷிகள் இவர்களுடைய ரோமம் அடர்ந்த தாடி மூஞ்சிகளையே பார்த்துப் பார்த்துச் சலித்துப் போயிருந்ததால் அர்ச்சுனனுடைய முகத்தைப் பார்த்ததுமே அதுகளுக்குக் குளிர் ஆட்டியது.
    அர்ச்சுனன் பொம்பளை விஷயத்துல எப்படி சபலசித்தனோ அதேபடிக்கு ‘மகாமன’ அடக்கமுடையவன்.

    ‘ஆத்து மணலை எண்ண முடிஞ்சாலும் அர்ச்சுனனுக்குப் பெண்டாள இசைந்தவர்களை எண்ணி மாளாதுங்கிறது’ சொலவடை. இந்த விஷயத்தில் கிருஷ்ணர், அர்ச்சுன்ன் ரெண்டு களுதைப்பயல்களும் ஒண்ணுதான் என்று தாத்தா ஒரு போடு போட்டுவிட்டு மேற்க்கொண்டு தொடர்ந்தார்.

    அர்ச்சுனனைக் கவர்ச்சி பண்ண அதுகள் சாமர்த்தியத்தையெல்லாம் காட்டி ஆடினாங்களாம். அவனுக்கு சகல பணிவிடைகள் செய்ய, கவனிச்சுக்கிட இதுகளைத்தான் இந்திரன் ஏற்பாடு பண்ணியிருந்தானாம்.

    என்ன செஞ்சி என்ன அர்ச்சுனன்கிட்டே அதுக குண்டு பலிக்கலே.
    சரி, இவனே இன்னொரு சமயந்தான் வச்சிக்கிடணும் என்று சொல்லி மத்ததுகள்ளாம் கைவிட்டு விட்டதுக. ஆனா இந்த ஊர்வசி இருக்காளே மகா ‘பிடிசாதகம்’ பிடிச்சவ. கொஞ்சம் வித்தியாசமான பொண்ணுனு வச்சிக்கிடுங்களேன்.

    அவனைப் பார்த்து பாத்து மருகுதாளாம். வேண்டி வேண்டி கேட்டுக்கிட்டாளாம். ஒரு பொம்பளை வாயைத் தொறந்து கூப்பிட்ட பெறவும் ஒரு ஆம்பளைப் பயல் மாட்டேம்னு சொன்னா அது மாதிரிப் பாவம் வேற உண்டுமா? அந்தப் பாவமும் பெறவு அர்ச்சுனனைப் பிடிச்சது. அவ ஒரு வார்த்தை கேட்டா அவனைப் பார்த்து, ‘பேடிப்பயலே’ன்னுட்டு. அதுதாம் பலிச்சது பின்னாலே. அது அவ கொடுத்த சாபம் என்றார் தாத்தா

    உடனே சாபம் கொடுத்துட்டாளா என்று கேட்டோம். உடனே கொடுக்கலை. பூலோகத்துல வந்துதாம் கொடுத்தா
    பூலோகத்துக்கு எதுக்கு வந்தா
    அர்ச்சுனன் பூலோகத்துக்குத் திரும்புனப்போ அவளும் அவனெத் ‘தொரத்திக்கிட்டே’ வந்தா. இவம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாம்; எங்கூட வராதேன்னுட்டு. யாரு கேப்பா!

    இப்பதாம் நம்ம கதைக்கு வர்றோம் என்று சொல்ல தொடங்கினார் தாத்தா. இந்த ஊர்வசிக்கு ஒரு பழக்கம் உண்டு. பிரியமா வெத்திலை போடுவா. அப்போ பூலோகத்துல வெத்திலை கிடையாது. அது தேவலோகத்துல மட்டுந்தான் இருந்த்து. தேவர்களுக்கு மட்டும்தான் உகந்த வஸ்த்து. அதை பூலோகத்துக்கு கொண்டு வந்தவளே இந்த ஊர்வசிதாம்.

    அதை ‘சட்டப்படி’ இங்கே கொண்டு வரப்படாது. அதனாலே ஒளிச்சிவச்சிக் கொண்டு வந்தா. அர்ச்சுனன் பூலோகத்துக்குப் புறப்பட்டுட்டாம்னு தெரிஞ்சதும், அவசர அவசரமா அவ வீட்டுத் தோட்டத்துல பயிராகியிருந்த வெத்திலைக் கொடியில கிள்ளி இலையை பறிக்க நேரமில்லாததுனால கொடியோடவே பறிச்சு ஒளிச்சு வச்சுக்கிட்டா.

    இப்போ நாம, தேசம் விட்டு தேசம் போனா சோதனை போட்டுத்தானே வெளியே விடுறாங்க. அதுபோல தேவலோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்தா சோதனை போட்டுப் பார்த்துத்தாம் அனுப்புவாங்களாம். இது பெரியவங்களுக்கு கிடையாது. சில்லுண்டிகளுக்குத்தாம் என்றார் தாத்தா.

   
அதனால் ஊர்வசி என்ன செஞ்சாளாம். வசமா அந்த இடத்தில வச்சிக் கட்டிக் கொண்ணாந்துட்டாளாம் என்று சொல்லிச் சிரித்தார்.
    ‘செ’ என்றான் கிட்டான் முகம் சுளித்து
    ‘என்னடா…செ…தோ…ன்னுகிட்டு. நாளைக்கு கலியாணம் ஆனா அதுல தாம் தலைவச்சுப் படுத்துக் கெடப்பே’ என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.

    இந்த அளகுலதாம் வெத்திலை பூலோகத்துக்கு வந்து சேர்ந்த்து.
    கடைசி வரைக்கும் அர்ச்சுன்னை இணங்கவைக்க முடியலை ஊர்வசியாலே
    அவம்மேல உள்ள கோபத்தாலே வெத்தலையை உதறி எறிஞ்சுட்டு அவனுக்கு சாபமும் கொடுத்துட்டும் போயி சேந்தா, தேவலோகத்துக்கு.

    அப்படி விழுந்த வெத்திலை கொடி தாம் தளுத்து பூலோகவாசிகளுக்கு வெத்திலையாச்சு. இன்னைக்கும் பிரியத்துக்கு ஒரு அடையாளமாக இருக்கு. பிரியமாக் கொடுத்தாத்தாம் வெத்திலையும் செவக்கும்

மறைவாய் சொன்ன கதைகள் 7

இருதலைமணியன்

ஆண்பிள்ளை ஒருத்தனுக்கு ரெண்டு ‘இது’ இருந்தது. பிறவியிலேயே அவனுக்கு இப்படி அமைஞ்சிருந்த்து. ரொம்ப அபூர்வந்தான் இது.

அஞ்சிதலை நாகம் ஏழுதலை நாகம் இப்பிடி இருக்கது போல அபூர்வமா இப்படி கோடியில ஒருத்தனுக்கு அமையுமோ என்னவோ

இன்னொரு அதிசயம், அவனுக்கு இப்பிடி இருந்ததுனாலயோ என்னவோ ரெண்டு ஆள் பலமும் வீரியமும் இருந்த்து.
ஒருத்தரு சொன்னாரு ‘இருக்கும். ரெண்டு ‘இது’ இருந்தா ரெண்டாள் பலம் இருக்கத்தானே செய்யும்! அவரு சொன்னது ஏடாசியா நெசமான்னு தெரியலன்னாலும் எல்லாரும் சிரிச்சாங்க.

இப்பிடி இருந்ததுனால அவனுக்கு ‘இருதலைமணியன்’னு பட்டப் பேரு ஏற்பட்டுப்போச்சு!


எல்லோரும் அவனெ ரொம்ப கேலி பண்ணுனதுனால அவம் ஊரெ வுட்டே காணாம போய்ட்டாம். ரொம்ப தூர ஊர்ல போயி, யாரும் முகந்தெரியாத இடத்துல போயி வேல செஞ்சி பிழைக்கிறதுன்னு ஆயிட்டது.
அங்கே யாருக்கும் இது தெரியாம இருக்கும்படியா பாத்துக்கிட்டாம்.
பய வளந்து இளவட்டு ஆனாம். பாக்கவும் லெட்சணமா இருந்தாம்.

இப்பிடி இருக்கையில, அவனும் மனுசம்தானே, அவனுக்கு பொம்பளை ஆசை வந்தது.
வராதா பின்ன என்று கூட்டத்துல ஒருத்தர் சொன்னார்.
வேல செஞ்சி சம்பாதிச்ச பணத்துல கொஞ்சம் மிச்சம் வச்சி, ஒரு நா ‘தேவிடியாக்குடி’ போனாம்.

அங்கே ஒருத்தி பாத்துக்கிட்டா அத.
அவளுக்கு இது அதிசயமா இருந்தது. வித்தியாசமா இருந்தது. அதனால அவ அவன வெளியவிடாம ராத்திரிபூரா தங்கிட்டயே வச்சிக்கிட்டா.

காலையில ஆத்துக்கு அவ குளிக்கப்போன எடத்துல தனக்கு வேண்டப்பட்ட சிநேகிதக்காரிக்கிட்ட இதெ சொல்லிச் சொல்லி சந்தோசப்பட்டா.
சிநேகிதக்காரிக்கும் இப்படியாப்பட்ட காரியங்கள்ள ரொம்ப பிரியம். அதனால அவ, நா இப்பவே ஓங்கூட வர்றேம். நானும் அதெப் பாக்கேண்டாமான்னு புறப்பட்டுட்டா.

அவ அத பாத்து அனுபவிச்சுட்டு அவளோட சேத்திக்காரி நாலு பேரு கிட்ட சொன்னா.
ஆக இப்பிடி இந்த ரகசியம் தீயாப் பரவி இந்த விசயத்துல ரொம்ப பிரியமான பொம்பளைகளுக்கெல்லாம் தெரிஞ்சி, பயலுக்கு ஒரே கிறுக்கு ஆயிட்டுது.
இருக்காதா பின்னே என்றார் ஒருத்தர்.
இப்பல்லாம் அவன் வேலைக்கே போறதில்ல

அவனோட ‘சங்கதி’ விஷயம் அந்த நாட்டோட அரண்மன அந்தப்புரத்துக்குள்ளேயும் போயிட்டு. மகாராணிக்கு ரொம்ப வேண்டப்பட்ட ஒரு சேடிப் பொண்ணு பாத்து வந்து சொல்லிட்டா.
இப்ப மகாராணிக்கும் அதெப் பாக்கணும்னு ஆயிட்டது.
அந்த சேடிப்பொண்ணு மூலமாவே மகாராணி அவனுக்கு ரகசியமா தாக்கல் சொல்லி அனுப்பிச்சா.

அவம் பதறிப் போயிட்டாம். இதேதுடா சங்கட்டம். வம்புல போயி மாட்டுவம் போலுக்கேன்னு நெனச்சி அவகிட்ட ஏத்தா நீ என்னமோ ஆசெப்பட்ட வந்தே போனேன்னு இருக்காம இதெப் போயி அரண்மனையில மகாராணியிட்ட பத்த வெச்சிட்டயெ. அப்படியாப்பட்ட இடத்துக்கெல்லாம் நாம போவலாமா?

அதுக பேன் எடுத்தாலும் எடுக்கும், காத அத்தாலும் அத்துருமே. என்னால முடியாது ஆத்தா. நா வர மாட்டேன்னாம்.

நீ ஒண்ணும் பயப்படவேண்டாம். மகாராணிக்கு இதுல எல்லாம் பிரியம் சாஸ்த்தி. ஒன்னெ ‘பொன்னுங்கண்ணுமா’ வச்சிக்கிடுவா. சும்மா வா; அங்கே வந்துட்டே ராசாக்கணக்கா இருக்கலாம்னா.

ஏத்தா என்னே ஆளவிடுன்னு சொல்லிப்பாத்தாம்.

இந்தா பாரு இது மகாராணியோட ஆக்கின. நீ வல்லேன்னா இப்ப ஒந்தலைக்கு கத்திதாம் காத்துக்கிட்டிருக்கு. தப்பிக்க முடியாது பாத்துக்க.
அங்க வந்து இருக்க ஒனக்கு என்ன கொள்ள. நல்..லா தின்னுட்டு பொலிகாள போல இருக்க வலிக்கா உனக்கு? மரியாதையா எந்திரிச்சி எம் பொறத்தால வான்னா.

நல்லா ரோசிச்சுப் பாத்தாம். இங்க இப்பிடி அரையுங் கொறையுமா தின்னுக்கிட்டு இந்த முண்டெக கூட லோலுப்பட்டுக்கிட்டு இருக்கத விட அங்கென போயி ராசாக்கணக்க இருக்கலாம்னு தோணிச்சி. சரீன்னுட்டாம்.
பொண்ணு வேசம் போட்டு ராத்திரியோட ராத்திரியா சேடிப்பொண்ணு கூடவே ராணியோட அந்தப்புரம் போயிச் சேந்தாம்.

அப்ப ராசா நகரத்துல இல்ல. வேட்டையாடப் போயிருந்தாரு. வேட்டையாடப் போனா அங்க கொஞ்ச நா தங்கி இருந்துட்டுதாம் வருவாரு. அதனால இங்க இவம்பாடு வேட்டையா இருந்திச்சி.
சாதாரண விசயமா இருந்தா பரவா இல்லாம இருக்கும். இது அதிசயமான விசயமாச்சே. எப்பிடியோ பொட்டைச்சிக மத்தீயில கிசுகிசுப்பாயி இது இன்னொரு ராணிக்குத் தெரிஞ்சு போச்சி. அவளும் ராசாவுக்குப் பிரியமான ஒரு மகாராணிதாம்.

அவ மாத்திரம் என்ன.. நான் பாக்கேண்டாமான்னு கேட்டனுப்பிச்சா
இது நாம்பாத்துக் கொண்டாந்தது. நா வச்சிருக்கேம். ஒனக்கென்ன? வேணும்னா நீ பாத்து ஒண்ணெ கொண்டாந்து வச்சிக்கயேம்னா
அது என்ன அம்புட்டு லேசாக் கிடச்சிருமா. அதெ எப்பிடிக் கண்டு புடிக்கது!

அதென்னமோ எனக்குத் தெரியாது. எனக்கு வேணும். அது எப்பிடித்தாம் இருக்குதுன்னு நாம் பாக்கணும்னு சொல்லி அனுப்பிச்சா அந்த இன்னொரு ராணி.

இப்பிடியே இவுகளுக்குள்ள ஒரு ‘எசலிப்பு’ ஏற்பட்டு, ராசா வேட்டையிலிருந்து திரும்புறதுக்கு முன்னாடி அவரு காது வரைக்கும் போயிட்டுது சண்டை. ராசாவுக்கு கோவமான கோவமில்ல’. அண்ட கடாரம் முட்டிப் போச்சி

‘தாயோளிது’ ஏம் அரமனைக்குள்ளாற வந்து அப்பிடி ஒரு பய வந்து இருக்க அவனுக்கு என்ன ரெண்டு ‘இதா’ இருக்குன்னு கேட்டாரு.

ஆமா ராசா…அப்பிடித்தாம் கேள்வி; அவனுக்கு ரெண்டுதாம் இருக்கும்னாங்க.

சே..இது மோசக் கேடுல்லா வந்து சேந்திருக்கு. அவனப் புடுச்சி அப்பிடியே அதும்மேல யானைய விட்டு மிதிக்க வச்சிக் கொன்னுப்புடுங்கன்னு ஆக்கின அனுப்பிச்சிட்டாரு.

இது எப்பிடியோ மகாராணிக்கு வேண்டியவன் ஒருத்தன் அங்கிருந்து ரகசியமாச் சொல்லி அனுப்பிச்சி ‘இருதலைமணியனை’ தப்பி ஓடி போகச் சொல்லிட்டா ராணி.

பயல் எங்கே போனானோ தெரியல. தல மறைவாயிட்டாம். ஏதோ வேலை செஞ்சி பொழக்க முடிஞ்சதே தவிர, முந்திய மாதிரி பொம்பளைகிட்ட போயி ‘நல்லாப் பொல்லா’ இருக்க முடியல; இருந்தாத்தாம் தெரிஞ்சி போகுமே.

ராசா முரசு அறஞ்சி தேசம் பூராவும் அறிவிச்சிட்டாரு. இன்ன இன்ன மாதிரி அடயாளம் உள்ள இளந்தாரிப்பயல புடுச்சி யாரு தர்றாங்களோ அவர்களுக்கு பதினாயிரம் களஞ்சிப் பொன் தர்றதாக!

வேலை செய்ய மாச்சப் பட்டவெனெல்லாம் மந்தை,சந்தை,வெளிக்கிருக்குத இடம் இப்பிடி எவனுக்கு ரெண்டு இது இருக்குன்னு தேடிக்கிட்டு அலையுதாங்க.
சும்மாவா பதினாயிரங்களஞ்சி பொன்னுல்லா!

இந்தப்பய யாரு கண்ணுலயும் காங்காம அலைஞ்சி திரிஞ்சதுல உடம்பு பூரா முடி காடா வளந்து போச்சு. ஒரு நா நாசுவம் கிட்ட போயி ‘ஏடே எனக்கு உடம்பு சவரம் பண்ணனும். நா ஆத்துல இந்த மரத்துக்குக் கீழ இருக்கேம். வந்து செஞ்சயனா ஒனக்கு ஒரு களஞ்சிப் பொன்னு தருவேம்னு சொல்ல நாசுவனும் சரி போங்க வர்றேம்னாம்.

இவம் போயி மரத்து எணல்ல மறைவான இடம் பாத்து  மணல்ல ‘ஒண்ணைப்’ பொதச்சு வச்சி உக்காந்துக்கிட்டு இருந்தாம் கண்டுபிடிச்சிரக்கூடாதேன்னு. நாசுவன் கிண்ணத்துல தண்ணி எடுத்துக்கிட்டு வந்து எதுர்க்க மணல்ல உக்காந்துக்கிட்டு தண்ணிய விட்டு நல்ல இவன தேச்சிவிட்டாம்.

பயலுக்கு ‘பாத்து’ ரொம்ப நாளாச்சி. அதுலயும் வேத்து மனுசன் கைப்பட்டதும் தேச்சதும் சேந்து, மணலுக்குள்ள தெரியாம இருக்க பொதச்சு வச்சிருந்த்து 'படார்'னு வேகமா எந்திரிச்சதுல நாசுவம் கண்ணுல மணலு விழ, அவம் சத்தம் போட்டு ‘யப்பா…நீதானா அது’ன்னு கேட்டுட்டாம்.

பிடிச்சானே ஓட்டம்.

யய்யா எனக்கு கண்ணுல மண்ணு விழுந்தாலும் குத்தமில்ல. பதினாயிரங் களஞ்சி பொன்னு வேண்டாம். அந்த ஒத்த களஞ்சி பொன்னாவது குடுத்துட்டு போரும்னு இவம் பொறத்தாலயே ஓட, அங்க ஆத்துல குளிச்சிட்டு வேட்டியக் காயப் போட்டுட்டு இருந்தவங்கள்லாம் என்ன ஏதுன்னு கேக்க…

‘அய்யோ போகுதே பதினாயிரங் களஞ்சிப் பொன்னு போகுதேன்னு’ இவம் கூப்பாடு போட, அங்கே ஒரே அவக்காடு ஆயிட்டு.

‘பெறகென்ன…போனவம் போனவந்தாம்’

ராசா அவனத் தேடிட்டிருக்காம். ராணியும் தேடிட்டிருக்கா.
பாத்தாச் சொல்லுங்க. பதினாயிரம் களஞ்சியம் பொன்னு கெடக்கும்

மறைவாய் சொன்ன கதைகள் 6

 இப்படித்தான் ஒரு ராஜகுமாரன்; நாலுதனங்கள் உள்ள பொண்ணைத்தான் கட்டுவேன்னு அடம்பிடிச்சான். இது என்ன கூத்துடாப்பா; மதுரை மீனாச்சிக்கு மூணுதனங்கள் முதலில் இருந்ததாகச் சொல்லுவாங்க. இவன் என்னடான்னா நாலு தனங்கள் வேணுங்கறானே எங்க போக, என்று பெரியவங்க வருத்தப்பட்டாங்க.

யப்பா, இப்பிடியா உள்ள ஒரு பெண்ண நீதாந் தேடிக் கண்டுபிடிக்கணும். எங்களாலே ஆகாதுன்னுட்டாங்க.

சரீன்னு சொல்லி இவன் புறப்பட்டாம். ஊரு ஒலகமெல்லாம் சுத்தினாம். ஆத்துல குளத்துல வாய்க்கால்லன்னுட்டு வரீசைய பாத்துகிட்டே வந்தாம். விதவிதமானதுகளத் தாம் பாத்தானே தவிர நாலு உள்ளதுகளுமில்ல. மூணு உள்ளதுகளுமில்ல. சொல்லப் போனா ஒண்ணரை, ஒண்ணே முக்காலு இப்பிடித்தான் இருந்துச்சாம்.

பயலுக்கு சே’ன்னு ஆயிட்டது!

பின்னே ஏம் இப்பிடிச் சொன்னாம்?
அதுக்கு ஒரு காரணம் இருந்தது.

ஒரு நா ராத்திரி அவம் தூக்கத்துல ஒரு சொப்பனங்கண்டாம். அந்த சொப்பனம் விடியப் போற நேரத்துல வந்தது.

விடியப் போற நேரத்துல வார சொப்பனம் பலிக்கும்ங்கிற நம்பிக்கெ.
அந்த சொப்பனத்துல ஒரு பொண்ணு குளிச்சிக்கிட்டிருக்கா; உடம்பெத் தேச்சிக் குளிக்கிறப்போ தேக்கிற வளைய சத்தங்கூடக் கேட்டுது. கவனிச்சிப் பாத்தப்போ அந்தப் பொண்ணுக்கு முதுகுல ரெண்ணு தனங்கள் இருந்தது.
ரொம்ப ஆச்சர்யம் இவனுக்கு.

இவனே நெனச்சது உண்டு; இப்பிடி இருந்தா சில சமயத்துல வசதியா இருக்குமேன்னுட்டு.

முழிப்புத் தட்டியதும் தான் நினைச்சாம். நிச்சயம் எங்கோ அப்பிடி ஒரு பொண்ணு இருக்கா. கட்டாயம் தேடிக் கண்டுபிடிச்சிக் கட்டிக்கிடணும். அதுலயிருந்து அவன் அவளைத் தேட ஆரம்பிச்சாம்.

நாலு தனங்கள் உள்ள பொண்ணுகளெத் தேடித் தேடி எங்கயும் காங்காம அலுத்து, ஒருநா ஒரு குளத்தங்கரை மரத்து எணல்லெ அசந்து படுத்தவன் நல்லாத் தூங்கிட்டாம்.

அவம் முந்தி ஒருநா சொப்பனத்துல கண்டானே, அப்பக் கேட்டுதெ, அதேபோல வளைய சத்தம் கேட்டுது.
கொஞ்சங்கொஞ்சமா பயலுக்கு முளிப்பு வந்தது.
அரண்மனையில, பஞ்சுமெத்தயில படுத்துக்கிட்டிருக்கிறதா நெனச்சிக்கிட்டிருந்தவனுக்கு, மரத்துக் கடியில உதுந்து குமிஞ்சிக் கிடக்கிற சருகு இலைக மேல வேட்டிய விரிச்சிப் படுத்துக் கிடக்குது தெரிஞ்சது. பெறவுதாம் குளத்துக்கரைங்கிறது ஞாபகத்துக்கு வந்தது. ஆனா, வளையச்சத்தம் இன்னும் கேட்டுக்கிட்டுத் தானிருந்தது.

பைய்ய எந்திரிச்சி பாத்தாம். கண்ணெ கசக்கிவிட்டுப் பாத்தாம். சொப்பனங்காணலை, நெசந்தாம்! அந்த தாமரைக் குளத்து படிக்கட்டுல ஒரு பொண்ணு அம்மணமா குளிச்சிக்கிட்டிருந்தா. யாருமே பாக்கலெங்கிற தைரியத்துல சாவாசமா உக்காந்து குளிச்சிட்டிருந்தா. இவனுக்கு அவளோட முதுகுப்பக்கந்தாம் தெரியிது. முதுகுல ரெண்டு தனங்கள் இருந்தது தெரிஞ்சது.

ஆகா! நாம நெனச்சது கெடச்சுட்டு. கடவுளே கொண்டாந்து காணிச்சிட்டார். சரி, இவ குளிச்சி முடிக்கட்டும். இவளுக்குத் தெரியாமயே இவ பெறத்தால போவம். எந்த வீட்டுக்குள்ளாற நுழையிதாளோ அதெ கவனிச்சி வச்சிருந்து மொறப்படி போயி பொண்ணு கேட்டு கலியாணத்த முடிச்சிருவம்னு  தீர்மானிச்சி, அதே பிரகாரம் அவ குளிச்சிட்டுப் போயி நுழையிற அவ வீட்டையுங் கண்டுபிடிச்சிட்டாம்.

பெறகென்ன; போயி பொண்ணு கேட்டாம்.
ராசாவுக்கு பொண்ணுகேட்டா முடியாதுன்னு சொல்ல இயலுமா?
கலியாணம் முடிஞ்சது.

மொதநா ராத்திரி, பய ஆசையோட அவளெ கட்டிப்புடுச்சி முதுகெப் புடிச்சாம்.
என்னத்தெ எளவு ஒண்ணத்தையுங்காணம்?ன்னு அவக்கிட்டயவே கேட்டாம்.
அவளுக்கு சிரிப்பு வந்திட்டு. அட கோட்டிக்காரப்பய ராசா மவனேன்னு நெனச்சிக்கிட்டு.

‘மாட்டுக்கு வாலு பின்னாலே
மனுசனுக்கு பாலு முன்னாலே’ங்கிறது கூட ஒனக்குத் தெரியாதா?

மார்ல இருக்கவேண்டியது எங்கனாச்சும் முதுகில இருக்குமான்னு கேட்டா
ஏங்கண்ணாலயே பாத்தென ஒம் முதுகில இருந்த்தேன்னு கேட்டாம்
முன்னால இருந்த அதெத்தாம் நீ பின்னால பாத்தென்னா

இவனுக்கு வெளங்கல.

பெறவு அவதாம் வெளக்கமாச் சொன்னா

ஒடம்ப நல்லாத் தேய்ச்சிக் குளிக்கணும்னுட்டுதாம் அவ அந்த காட்டுக் குளத்துக்குப் போவாளாம். வயித்துக்குச் கீழெயெல்லாம் தேச்சிக் குளிக்க இதுக ரெண்டும் எடைஞ்சலா இருக்கும்னுட்டு அதுகள ரெண்டு தோள்களுக்கும் மேலே எடுத்துப் போட்டுக்கிடுவாளாம். அதுக முதுகில கிடக்கும்போது பாத்துட்டு பய சரியாப் பாக்காம முதுகுலதாம் இருக்கும்னுட்டு நெனச்சிக்கிட்டா நாம என்ன செய்யிறதுன்னு கேட்டாளாம்

மறைவாய் சொன்ன கதைகள் 5

பாலியல் கதைகள் எல்லா மொழியிலும் இருக்கு. அதை திரட்டுவதாலும், வெளியிடுவதாலும் நம் ஆச்சாரம் போய்விடும் என்று அரற்றுவது பேதமை. மனுஷன் எங்கெல்லாம் இருக்கானோ அங்கெல்லாம் மனுஷநாத்தம் இருக்கும்.



இவை மக்களிடையே உள்ள கதைகள். 'ராஜநாராயணன்' உண்டாக்கிய கதைகள் அல்ல. அதை அவ்வளவையும் சேகரிக்கணும். ஆபாசம் என்பதை ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டால் கூட இதைத் தெரிந்து கொள்வதால் ஒருவன் கெட்டுவிடுவான் என்று சொல்ல முடியுமா?நான் சின்ன வயதில் இதுபோல வண்டி வண்டியா கேட்டிருக்கேன்.

பாலியல் கதைகள் அத்தனை விஷயங்களையும் படித்துப் பார்த்தால் அதன் காலகட்டம் கி.மு.-கி.பி என்பதுபோல -நம் சமூகத்தில் திருமணம் என்ற மரபு வருவதற்கு முன்னால்-திருமண மரபு வந்ததுக்குப் பின்னால் என்று கொள்ள வேண்டும். மானுட வளர்ச்சியில் ஒரு கட்டத்தில்தான் திருமணம் வருகிறது.'

  - 'நாட்டுப்புற பாலியல் கதைகள்' (நீலக்குயில் பதிப்பகம்) நூலின் முன்னுரையில் கி.ராஜநாராயணன்....

அவர் சொன்னது போல மனித நாகரிகத்தில் திருமணம் ஒரு கட்டத்தில் வந்தது இல்லையா?. அதற்கு முன்பும் காமம் இருந்தது. அப்போதே பாலியல் கதைகள் தோன்றியிருக்கவேண்டும்...இல்லையா? இனி ஒரு கதை...

******************

ஒரு ஊர்ல ஒரு சம்சாரி (விவசாயி). அவம் பொண்டாட்டி பாக்க அழகா இருப்பா. அவளோட மார் அழகே தனி. அவளுக்கு அடுத்த தெருவுல கடை வச்சிருந்த ஒருத்தனோட 'தொடுப்பு' உண்டாயிப் போச்சு. எப்பிடின்னா.....

அவ போனா மட்டும் அவன் கடையில ஒரு கூறுப் பருத்திக்கு ரெண்டு கூறுப் பருத்திக்கு உண்டான சாமான்கள் கொடுக்கிறது. ஒழக்குத் தானியத்துக்கு அரைப்படித் தானியத்துக்கு கொடுக்கிற அளவுக்கு - ரெண்டு மடங்கு சாமான்கள் தந்தான். ஒரு நா ராத்திரி, அவ சாமான்க வாங்க வர்றதுக்கு கொஞ்சம் நேரமாயிட்டு. ஆனாலும் அவம் காத்திருந்தான். வளக்கம் போல தானியம் கொண்டு வந்தா. சாமான் வாங்குனா.

புறப்பட்டு போறதுக்கு முன்னாடி, அவ தயங்குன மாதிரி இருந்தது.

என்னெங்கிற மாதிரி அவெள ஏறிட்டுப் பார்த்தான். அப்பதாம் அவ சொல்லுவா.'ஒடம்பு ஏம் இப்பிடி மெலிஞ்சிக்கிட்டே வர்ரீறு. வைத்தியருகிட்டே கையக் காமிச்சு மருந்து ஏதாவது சாப்பிடக் கூடாதா?'

அப்பதாம் அவம் தன்னோட ஆசைய தயங்கி தயங்கிச் சொன்னாம்.

இவ அதுக்கு ஒண்ணுஞ் சொல்லாம, வேற என்னத்தையோ பத்தி அவங்கிட்டே ஒரு தகவல் விசாரிக்கிற மாதிரி விசாரிச்சா. இவம் அதுக்கு என்னத்தையோ பதில் சொன்னாம்.

இப்பிடிக் கொஞ்சம் நேரம் போச்சி. அதுக்குப் பிறகு என்ன பேசன்னுட்டுத் தெரியல. இவம்தான் சொன்னாம்.'நாளைக்கு ஓம் வீட்டுக்கு வரட்டா?'

அவ அதுக்கு ஒண்ணுஞ் சொல்லாம ஒரு 'குறுஞ்சிரிப்பாணி' சிரிச்சிட்டுப் போயிட்டா.


***

காட்லே சம்சாரி விடியுமின்னெ உழப் போனான். ஏரெக் கட்டி கொஞ்ச நேரந்தாம் உழுதிருப்பான். தண்ணிக் கலயத்தெ காக்கா உருட்டிவிட்டுட்டது.

இது என்னடா சங்கட்டம். தண்ணியில்லாம என்ன செய்ய. வெயிலேறிட்டா தண்ணி குடிக்காம முடியாதென்னு ஏரெ நிறுத்திட்டு, கலயத்தெ எடுத்திக்கிட்டு விறுவிறுன்னு வீட்டப் பாக்க வந்தாம்.

வீட்டுக் கதவு சாத்தியிருக்கு.இந்நேரத்துக்கு வீட்டுக்கதவு சாத்தியிருக்கக் காரணமில்லையே.

என்ன விசயம்னு தொறவால் தொளை (சாவி துவாரம்) வழியா உள்ளுக்குப் பாத்தா, அவம் கண்ணுக்கு ஒரு காச்சி (காட்சி) தெரியுது.

கடைக்காரன் இவம் பொண்டாட்டி மார்ல வாய வச்சி..................

படபடன்னு கதவெத் தட்டினான்.கதவு தொறந்தது. இவம் பெண்டாட்டி இவனெப் பாத்ததும் 'ஓ'ண்ணு கதறிக் கிட்டே, நல்லவேளை இப்பவாது வந்தீளே. ஏம் பாட்டெப் பாத்தீளா. இந்தக் கொடுமை உண்டுமா. இவரு இல்லேன்னா நாஞ் செத்துத்தாம் போயிருப்பேம் என்று சொல்லி அழுதாள்.

புருசங்காரனுக்கு ஒண்ணும் வெளங்கலே.

கடைக்காரனெப் பாத்தா அவம் தலெயக் கவுந்துகிட்டு ஒண்ணுஞ்சொல்லாம நிக்காம்.

என்ன, என்ன சொல்லுதே என்ன நடந்தது. வெவரமாச் சொன்னாத்தானே தெரியும்னு கேட்டான் சம்சாரி.

என்னத்தெ வெவரமாச் சொல்ல, வெக்கக் கேடு. பருத்தி மார்ப் படப்புலெ போயி பருத்தி புடுங்கி அணைச்சி எடுத்துக்கிட்டுதாம் வந்தேன். 'சுரீர்'னு மார்ல தீக்கங்கு வச்ச மாதிரி இருந்தது. கீழபோட்டுப் பார்த்தா...சரியான கருந்தேளு. வலியான வலியில்லே. தாங்க முடியல. என்ன செய்யிறதுன்னுட்டுந் தெரியல. இவரு தேள் விசத்தை உறுஞ்சி எடுத்துருவாருன்னு சொன்னாங்க. இவரெப் போயி கூப்ட்டா, நா ஆம்பளை இல்லாத வீட்டுக்கு வரமாட்டேன்னுட்டாரு. பெறவு, நாந்தாம் சொல்லி, எம் வீட்டுக்காரரு அப்பிடியெல்லாம் நெனக்க கூடியவரு இல்லெ. அதோட ஆபத்துக்குப் பாவமில்லேன்னு கூட்டிட்டு வந்தேம். அப்போதைக்கு இப்போ தேவலைன்னாலும் வலி பொறுக்க முடியலன்னு அழுதா.

சரி...சரி...அழுவாதெ. இதெல்லாம் யாருக்கும் வரக்கூடியதாம். நம்ம என்ன செய்ய முடியும் அதுக்கு. பரவாயில்ல. அவராவது சமயத்துக்கு கூப்ட்ட ஒடனே வந்தாரெ.

'நா அங்க, தண்ணிய காக்கா கொட்டிட்டதுன்னு திரும்பவும் தண்ணி கொண்டு போறதுக்காக வந்தென்னு' கடைக்காரனுக்கு 'சமயத்துக்கு வந்து ஒதவினதுக்கு ரொம்ப உபகாரம்'னுட்டு சொல்லிட்டு, கலயத்துல தண்ணிய றெப்பிக்கிட்டுப் போயிட்டான்.

***

கொஞ்ச நா கழிஞ்சது.

ஒரு நா திடீர்னு அய்யோ தேள் கொட்டீட்டதேன்னு சம்சாரி கூப்பாடு போட்டான்.அடுப்பங் கூடத்துல வேலையா இருந்த அவம் பொண்டாட்டி எங்கே எங்கே 'தேளுதான்னுட்டுப் பாத்தீங்களா' என்று பதச்சிப் போயி வந்தா.

தேளுதாம் பாத்துட்டேன். வசமாப் பிடிச்சி மாட்டிட்டது. நல்ல கருந்தேளுன்னாம்.அய்யோ வலி பொறுக்க முடியலயே. நீ ஓடிப் போயி அந்தக் கடைக்காரனெ கையோட கூட்டிட்டு வா. ஓடு சீக்கிரம்னு அவசரப்படுத்தினான்.

அவளும் ஓட்டமும் நடையுமாப்போயி கடைக்காரன பாத்து, இன்ன மாதிரி, சங்கதி ஒடனே பொறப்பட்டு வா. நீ இப்ப வரலன்னா அவரு சந்தேகப் பட்டுடுவாரு. எந்தின்னு சொன்னா.

அவனுக்கும் நாம வர்றமா இல்லயான்னு பாக்கதுக்குதான் இதெல்லாமான்னு ஒரு எண்ணம்.

வேற வழியில்லாம அவனும் வந்தாம்.

எங்கே, எந்த எடத்துலன்னு கடைக்காரன் கேட்டாம்.

சம்சாரி வேட்டிய .......................

தாத்தாவோட சேர்ந்து நாங்களும் சிரிச்சோம்!

'பெறவு?' என்று கேட்டாம் கிட்டான்

பெறவு என்னடா பெறவு? பெறவு பெறவுதான்.

கடைக்காரப் பயல் தப்ப முடியல. வசமா மாட்டிக்கிட்டான்

மறைவாய் சொன்ன கதைகள் 4



ஒரு ஊர்ல ஒரு புருஷனும் பொண்டாட்டியும் இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை இருந்தான். அவனுக்கு ஏழெட்டு வயசு இருக்கும். அவன் ஒரு பைத்தியக்காரனா வளர்ந்தான்.

ஒரு நாள் பட்டப்பகலில் கதவை ஒருச்சாத்தி(சிறிது திறந்தபடி) வைத்துக் கொண்டு புருஷனும் பொண்டாட்டியும் ‘பேசிப் பெறக்கிக் கிட்டு’ இருந்தாங்க. அவங்களோட பையன் கதவின் இடைவெளி வழியா உள்ளே எட்டி அந்தக் கங்காட்சியைப் பார்த்துட்டான்.

தன் பாட்டியிடன் வந்து வீட்டுக்குள் தான் பார்த்த கங்காட்சியை பற்றிச் சொல்லி ‘அம்மாவும் அப்பாவும் என்ன செய்றாங்க பாட்டி’ என்று விபரம் கேட்டான்.
பாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டுட்டு, ‘கதவைத் திறந்து போட்டுக்கிட்டு அவங்க சந்தோஷம் கொண்டாடியிருக்காங்க’ என்பதைப் புரிந்து கொண்ட பாட்டி பேரன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்து வழக்கம் போல் ஒரு பொய்யைச் சொன்னாள்.

அந்தப் பேரன் அடிக்கை எசக்குப்பிசக்கா பாட்டியிடம் அப்படிக் கேள்விகள் கேட்பதுண்டு.

ஒருநாள் ‘பாட்டி நான் எப்பைப் பிறந்தேன்?’ என்றூ கேட்டான்.
பேரனின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல விரும்பாத பாட்டி, ‘நீ சின்ன பிள்ளையா இருக்கும்போது ஒரு கன்னப் பருந்து உன்னைக் கொண்டுவந்து உன் அம்மாவின் மடியில் போட்டுட்டுப் போய்ட்டு’ என்று ஒரு பொய்யைச் சொல்லி வைத்தாள்.

இப்பமும் அதே மாதிரி ‘பேரப்புள்ள, உங்கம்மா திடீரென்று செத்துட்டா, உங்கப்பா அவளைக் கட்டிப் பிடிச்சி உசிரு கொடுத்துக்கிட்டு இருந்திருக்கு. அதைத்தான் நீ பார்த்திருக்கிறெ.’ என்று பொய்யைச் சொல்லி வைத்தாள்.
பைத்தியக்காரனான பேரப்பிள்ளையும் பாட்டி சொன்னதை நம்பிட்டான்.
ஒரு வாரம் கழித்து பக்கத்து வீட்டில் ஒரு வயசுக்கு வந்த பொம்பளைப் பிள்ளை ஒருத்தி இறந்துவிட்டாள். எல்லோரும் போய் செத்துப்போன பிள்ளையைப் பார்த்துட்டு வந்தாங்க.

பாட்டியோட பேரனும் போய் செத்துப் போன அந்தப் பிள்ளையப் பார்த்துவிட்டு அங்கே நின்றவர்களிடம் ‘எங்கப்பா செத்தவங்களுக்குக் கெல்லாம் உயிர் கொடுக்கத் தெரிஞ்சவங்க. இப்ப எங்கப்பாவைக் கூட்டிக்கிட்டு வந்து செத்துப் போன இந்தப் பிள்ளையக் கட்டி பிடிக்கச் சொல்லுங்க. இந்தப் பிள்ளைக்கும் உயிர் வந்திரும்’ என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.
பையன் சொல்வதைக் கேட்ட நிறைய பேருக்கு ‘விபரம்’ புரியவில்லை. கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் மட்டும் விசயத்தை யூகித்துக் கொண்டு சிரித்தார்.

அதற்குள் பையன் வாய் திறந்ததைக் கேள்விப்பட்டு அவனோட பாட்டி ஓடோடி வந்து அவன் வாயைப் பொத்துக் கொண்டு. ‘வாடா வா பைத்தியக்காரப் பெயல் மகனே!’ என்று சொல்லிக் கொண்டே தன் வீட்டுக்கு பேரனைக் கூட்டிக் கொண்டு போனாள்.

பாட்டி போன பிறகு, பையன் சொன்னதைக் கேட்டு சிரித்த பெரியவரிடம் சுற்றி நின்று ‘என்னன்னு விபரம் புரியலியே. நீங்களாவது சொல்லுங்களேன்’ என்றூ கேட்க பெரியவர் சிரிப்பை அடக்கிக் கொண்டு தான் யூகித்த விஷயத்தை அனைவருக்கும் விளக்கினார். துக்க வீட்டிலும் சிரிப்பலைகள் பரவியது

மறைவாய் சொன்ன கதைகள் 3

"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கைகளூம் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம்காலமாக சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வருபவை. அவை ஆபாசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல. மனித இயற்கையில் பாலியல் தேவைகள், கற்பனைகள், மீறல்கள் குறித்த புனைவுகளே இக்கதைகள். பாலியல் மீதான ஒடுக்குமுறை ஒரு புறமும் பாலியல் கேளிக்கைகள் இன்னொரு புறமும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் இக்கதைகள் ஒரு சமூகத்தின் உளவியலை வெளிப்படுத்தும் ஆவணமாகத் திகழ்கின்றன. நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இவ்வளவு விரிவான அளவில் தொகுக்கப்படுவது தமிழில் இதுவே முதல் முறை" என்று பின் அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் வாசகம் கவர்ந்ததால் தான் நான் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். இணையத்திலும் சரி புத்தகங்களாகவும் சிடி, டிவிடிக்களாகவும் பாலியல் கதைகள் படங்கள் நிறைய கேட்டுப் பார்த்து படித்ததால் புத்தக வடிவில் அதைப் படிக்கும் தேவையில்லை என்னிடம்.

ஆனால் இந்த பின் அட்டை வசனம், இந்த நாட்டுப்புறப் பாலியல் கதைகள் மீதான ஒரு ஆர்வத்தை இயல்பாகவே கொண்டு வந்தது. படித்து முடித்ததும், புத்தகம் பற்றி தே.லூர்து சொல்லியிருக்கும் வாசகமான,

"ஏதோவொரு பயன் கருதியே இக்கதைகள் சொல்லப்படுகின்றன. இக்கதைகள் ஒழுக்கக்கேட்டை வளர்ப்பவை என்று சொல்ல இயலாது. இவை நகைப்பூட்டுபவை என்பதில் ஐயமில்லை. வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்பவை என்பதும் தெளிவு." என்ற வரிகளுடன் உடன்படுகிறேன்.

'நான் ஏன் இதை எழுதுகிறேன்?' பத்தியில் கி.ரா சொல்வதை கவனிக்க வேண்டும். அவர் 'பாலியல் கதைகள் எல்லா மொழியிலும் இருக்கு. அதைத் திரட்டுவதாலும், வெளியிடுவதாலும் நம் ஆச்சாரம் போய்விடும் என்று அரற்றுவது, பேதமை. மானுடவியலில் இதெல்லாம் இருக்கு...' '...பாலியல் கதைகள் அனைத்தையும் படித்துப் பார்த்தால் அதன் காலக்கட்டம் கி.மு - கி.பி என்பது போல் - நம் சமூகத்தில் திருமணம் என்ற மரபு வருவதற்கு முன்னால் - திருமணத்திற்குப் பின்னால் என்று கொள்ள வேண்டும். மானுட வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் தான் திருமணம் வருகிறது..." என்று சொல்கிறார். அப்படியே முன்னுரையில் '...பெண்களை அடக்கி ஒடுக்கு வைத்துக் கொடுமைப்படுத்தும் ஆண்களுக்கு எப்படித் தண்ணி காட்டியிருந்தார்கள் அவர்கள் என்று பல கதைகள் நகைச்சுவையோடு சொல்லும்...' சொல்வதை வைத்து, கல்வெட்டுகள் போல், செப்புப்பட்டயங்கள் போல் இந்தக் கதைகளும் வரலாற்றை மக்களின் வாழ்க்கை முறையை சமுதாய அமைப்பை புரிந்து கொள்ள உதவும் என்றே நினைக்கிறேன். அவர் சொல்வது போல் பாலியல் மனக் கோணல்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்றூ தெரிந்து கொள்ள முடிகிறது.


ஏதோ இந்தக் கதைகளைத் தொகுத்துவிட்டார்கள் நாமும் படிக்கிறோம், பரவாயில்லை கெட்ட வார்த்தைகளில்லை 'சூசகமா'த்தான் எல்லாத்தையும் எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறோம். சில கதைகள் நகைச்சுவையாகவும் சில கதைகள் பெருஞ்சிரிப்பை வரவைப்பவையாகவும். சில இப்படியும் இருக்க முடியுமா என்ற கேள்வியைக் கொண்டு வருவதாகவும் இருக்கின்றன. ஆனால் இந்தக் கதைகளைச் சேகரிக்க கி.ராவும் சரி கழனியூரானும் சரி ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பது அவர்கள் இந்தப் புத்தகத்தின் பின்னால் பின்னிணைப்பாகக் கொடுக்கப்படும் 'கதைகள் கறந்த கதை' இவை எத்தனை கடின முயற்சியில் தொகுக்கப்பட்டிருக்கிறது என்பது இப்படிப்பட்ட தொகுக்கப்பட்ட பாலியல் கதைகளை பதிப்பில் கொண்டு வருவது எத்தனை கஷ்டமான விஷயம் எனபதும் தெரியவருகிறது.

உயிர்மை ஸ்டாலில் இந்தப் புத்தகம் இருந்த பொழுது இரண்டு மூன்று தடவை சுற்றி வந்து எடுக்காமல் நகர்ந்துவிட்டேன் முதலில் பின்னர், 'எனி இந்தியன்' மூலமாய் வாங்கிக்கலாம் யாருக்கும் தெரியாது என்றே நினைத்தேன் :). ஆனால் இது அப்படியொன்றும் மறைக்கக் கூடிய விஷயம் இல்லை என்று தீர்மானித்து நேரடியாய் உயிர்மை ஸ்டாலிலேயே வாங்கினேன். இதை ஏன் சொல்கிறேனென்றால் நாளை பெங்களூரிலோ, சென்னையிலோ புத்தக்கக் கண்காட்சியின் பொழுது இந்தப் புத்தகம் உங்கள் கண்ணுக்குத் தட்டுப்படலாம். அப்பொழுது என்னைப் போல் தடுமாறாமல் மனித வாழ்வியலில் இதுவும் ஒன்று என்று எடுத்துக் கொண்டு வாங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்பொழுது கொஞ்சம் 'கதைகள் கறந்த கதை' பற்றி, கல்யாண வீடுகளில் இரவு வேலை செய்ய் நேரும் பொழுது வய்ற்காட்டில் களை எடுக்கும் நேரத்தில் பின்னர் வெயிலின் வெம்மையை மறக்க வைக்கவும் இம்மாதிரி கதைகள் சொல்லிக் கொள்கிறார்கள் என்று சொல்லும் கழனியூரன், பெண்கள் பெரும்பாலும் பெண்களிடமே இது போன்ற பாலியல் கதைகளை பரிமாறிக் கொள்வதாகவும், ஒரு ஆடவன் முன் அதுவும் அந்நிய ஆடவன் முன் சொல்லத் தயங்குவதாகவும். வயது வித்தியாசம் இன்றி பால் வேற்றுமையில் பாதிக்கப்பட்டு நாணம் கொண்டு சொல்வதில்லை என்கிறார். அதே போல் சில கதைகளை ஆண்கள், ஆண்களுக்கு மட்டும் சொல்வதாகவும் அதிலும் கொஞ்சம் பக்குவப்பட்டவர்களுக்கு மட்டும் சொல்வார்கள் என்பவர் ஆண்களிடம் இருக்கும் வேறு விதமான பிரச்சனையைக் கூறுகிறார், அவர்களிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மையால் படித்தவர்களிடம் தாங்கள் என்ன கதை சொல்ல என்று பெரும்பான்மையான ஆண்கள் இருப்பார்கள் என்றும் முன்பு பதிவு செய்த கேசட்டைப் போட்டுக் காட்டியதும் சொல்லத் தொடங்குவார்கள் என்று கூறினார். இதற்கு முற்றிலும் மாறுபட்டு 'நீ என்ன படிச்ச?' என்று கேட்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்கிறார்.

ஒருமுறை நான் போடும் 'அழிப்பாங்கதை'யை அழித்தால் கதை சொல்வதாகச் சொன்ன ஒருவரின் கதையை அழிக்க முடியாததைச் சொல்கிறவர், பின்னர் 'நாங்க என்ன படிச்சோம் ஏட்டுச் சுரக்காய்.' என்று லாவகமாய்ப் பேசி கதை கறந்ததைக் கூறுகிறார். இவர்கள் சேகரித்த கதைகளைப் போலவே கதை சேகரித்த கதையும் அருமையாக இருக்கிறது.

இந்தப் பின்னணியில் 'மறைவாய் சொன்ன க்தைகள் தொகுப்பில் இருந்து இன்னும் ஒரு கதை.

ஒரு அம்மாள் ரொம்ம நல்ல குணம். மொழு மொழு என்று, சதைப் பிடிப்போடு நன்றாக இருந்தாள். பாவம், விதவை. அதனால் பக்தி மார்க்கத்திலே திரும்பிவிட்டாள். பக்தர்களுக்கு - சாமியார்கள், பண்டாரம் பரதேசிகள், இப்படி எவ்வளவோ பேர் இல்லையா! அவர்களுக்கு - ரொம்பவும் உபகாரம் பண்ணலானாள். பொருளாலும் உழைப்பு பணிவிடைகளாலும், இஷ்டப்பட்ட பேருக்கு உடலாலும் திருப்திகரமாகத் தொண்டாற்றினாள்.

ஒரு சமயம் ஒரு சாமியார் வந்தார் பக்திக் காரியங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்த அந்த அம்மாள் வீட்டில் தான் தங்கினார். அவள் வழக்கம் போல் பொருள், உணவு, உழைப்பு, உடல் அனைத்தும் ஈந்து அவர் மனம் குளிர சேவை செய்தாள். அதில் அவளுக்கும் ரொம்ப திருப்தி.

ஒரு வாரம் சென்றது. சாமியார் புறப்பட்டுவிட்டார். அங்கேயே இருக்க முடியுமா பின்னே? அந்த அம்மாளை வெகுவாய்ப் புகழ்ந்தார் மறக்கவே முடியாது என்றார்.

அவள் கண்ணைக் கசக்கினாள். இனிமேல் இராத்திரிப் பொழுதுகள் சிரமப்படுத்தும்; தனிமையில் கஷ்டமாகத்தானிருக்கும் என்று சிணிங்கினாள்.

சாமியார் யோசித்தார். 'கவலைப்படாதே. நாராயணன் கிருபை செய்வான்' என்று சொல்லி, பைக்குள் கையைவிட்டு ஒரு சாமானை எடுத்தார்.

கழுத்து மாதிரி - உலக்கையின் நுனிப்பகுதி மாதிரி - அது இருந்தது. அரை அடிக்கும் அதிகமான நீளம். மினுமினுப்பாக, கடைசல் பிடித்தது மாதிரி, பருமனாக இருந்தது.

அதை அவர் அந்த அம்மாளிடம் தந்து, 'இது ரொம்பவும் புண்ணிய விஷயம். ஒரு சித்து புருஷரின் அருள் பெற்றது. உனக்கு எப்போ ஆசை ஏற்பட்டாலும் சரி. இதை அடிவயிற்றில் வைச்சு, நாராயணா நாராயணா என்று சொல்லு இது உள்ளே புகுந்து திவ்யமா விளையாடும். உனக்கு திருப்தி ஏற்பட்டதும் சிவசிவான்னு சொல்லு. இது மறுபடியும் பழைய நிலைமை அடைந்துவிடும்' என்றூ சொன்னார் 'இதைப் பத்திரமாப் பார்த்துக்கோ' என்றும் எச்சரித்துவிட்டுப் போனார்.


அந்த அம்மாள் சாயங்காலம் குளித்து, இரவானதும் பிள்ளையார் பூஜை செய்துவிட்டு, சிறிது உணவு உண்டு, உரிய நேரத்தில் படுத்தாள். முறைப்படி அந்தக் கழுத்தை எடுத்து தொடைகளுக்கிடையே கொண்டு போய், 'நாராயணா நாராயணா' என்று மந்திரம் போல் உச்சரித்தாள்.

ஆச்சர்யம்தான், அது உயிர் பெற்றது. அவளுக்கே 'போதும்' என்று பட்டதும், சிவசிவா என்று பெருமூச்சுடன் முனகினாள்.

அது வெளிவந்து அவள் வயிற்றின் மீது ஜீவனின்றிப் படுத்து விட்டது.

அவள் அயர்ந்து தூங்கிவிட்டாள். பிறகு கண்விழித்ததும் அதை எடுத்து முத்தமிட்டாள், ஆசையாய் தடவிக் கொடுத்தாள். அதை கழுவி பவுடர் பூசி விளக்குமாடத்தில் வைத்தாள்.

தினம் அதைக் குளிப்பாட்டி பூ போட்டு பக்தியோடு கும்பிட்டாள் ராத்திரி பொழுதுகளில் உள்ளே புகுந்து விளையாட விட்டாள். ஆகவே அவளுக்கு சந்தோஷத்துக்குக் குறைவே இல்லை.

ஒரு நாள் வேறொரு பரதேசி வந்தார். நாமம் போட்டுக் கொண்டு விஷ்ணு பக்தராகக் காட்சி அளித்தார். அந்த அம்மாளின் தர்ம சிந்தயைக் கேள்விப்பட்டு, அவள் வீட்டுக்கே வந்தார். அவளும் வழக்கப் பிரகாரம் உபசரித்தாள். இரவு அங்கேயே தங்கினார். புண்ணிய ஸ்தலங்கள், தீர்த்த யாத்திரை பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.

நேரம் ஆகிவிட்டது அவருக்கு கொட்டாவி கொட்டாவியாய் வந்தது, அவர் நாராயணா நாராயணா என்று உச்சரித்துக் கொண்டே வாயை பிளந்தார்.

விளக்குமாடத்திலிருந்த 'வரப்பிரசாதம்' பாய்ந்து வந்து அவர் வாயுள் புகுந்துவிட்டது. அவர் பதறிப்போனார்.

அந்த அம்மாள் திடுக்கிட்டுத் திகைத்து, என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்துவிட்டாள். பிறகு சமாளித்துக் கொண்டு 'சிவசிவா சொல்லுங்க, சீக்கிரம் சிவசிவா சொல்லுங்க' என்று கத்தினாள்.

அவர் வீரவைஷ்ணவர், சிவன் நாமத்தைச் சொல்லவே மாட்டார் அதைச் சொல்லாமல் கஷ்டப்பட்டார்.

'சிவசிவான்னு சொன்னால் தான் அது நிற்கும். தயவு செய்து சொல்லுங்க என்று அவள் கெஞ்சினாள்.

அவரும் இம்சை தாங்க மாட்டாமல், சிவசிவா என்றார் அது தானாக ஓய்ந்து விலகிக் கீழே விழுந்தது.

அந்த அம்மாள் அதை எடுத்துப் பத்திரப்படுத்திவிட்டு அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வதில் ஆர்வம் காட்டினாள்.

*இந்தக் கதை சைவ, வைணவ எதிர்ப்பு அதிகரித்து இருந்த கால கட்டத்தில் எத்தனையோ நாட்டுப்புறக் கதைகள் 'அதை' மையமாகக் கொண்டு கிராமத்து மக்களால் படைக்கப்பட்டுள்ளது. அதில் இது ஒருவிதக் கதை. மூத்த எழுத்தாளர் ஒருவர் சேகரம் செய்து கொடுத்த நாட்டுப் புறப் பாலியல் கதை இது.

By
http://www.blog.beingmohandoss.com/2008/07/blog-post_03.html

மறைவாய் சொன்ன கதைகள் 2

பேராசை தந்த பெருநஷ்டம்

நாட்டார் பாலியல் கதைகளை அச்சில் பதிவு செய்வதில் பத்திரிகை உலகிலும், பதிப்புலகிலும் மாபெரும் தயக்கம் இருந்தது.

கி.ரா. அவர்கள் முதல் அடி எடுத்து வைத்ததால் தாய் வார இதழில் நாட்டார் பாலியல் கதைகள் தொடராக வெளிவந்தது. உயிர்மை பதிப்பகம் ‘மறைவாய் சொன்ன கதைகள்‘ என்ற தலைப்பில் அக்கதைகளை நூலாக வெளியிட்ட பிறகு அத்தொகுப்பு குறித்து, இன்றைய தளங்களில் பல்வேறு மதிப்பீடுகள் பதிவாகியுள்ளன. அவையாவும் ஆரோக்கியமானதாகவும் சரியாக உள்வாங்கப் பட்டதாகவும் இருக்கின்றன.



 நாட்டார் பாலியல்கதைகள் பலவற்றை எழுத்தாளர்கள் பலரும் ஏற்கனவே தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள். ஆனால் அக்கதைகளை எழுத்தில் (அச்சில்) பதிவு செய்வதில்தான் அவர்களுக்குச் சிக்கலும் தயக்கமும் இருந்திருக்கிறது.



எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்கள் உயிரோடு இருந்தபோது, அவரின் நினைவில் இருந்த சில நாட்டார் பாலியல் கதைகளை எனக்குச் சொன்னார்கள் (என் வீட்டில் வந்து தங்கியிருந்தபோது). நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அத்தகைய கதைகளில் சிலவற்றை எனக்கு எழுதியும் அனுப்பினார்கள். அக்கதைகளில் ஒன்றை இந்த வாரம் வாசகர்களுக்குச் சுவைக்கத் தருகிறேன்.



நாட்டுப் புறக்கதைகளில் நீதி சொல்லும் கதைகளை மட்டும் தனியே தொகுக்கலாம். சில பாலியல் கதைகளும் நீதிக் கதைகளாக உள்ளன. அத்தகைய கதைகளுள் ஒன்றுதான் ‘பேராசை தந்த பெருநஷ்டம்‘ என்ற கதை.



இக்கதையில் வரும் கணவன் தன் ஆண்குறியை அறுத்துவிடுவதாக ஒருசெய்தி வருகிறது. ஆணாய் இருந்து, பெண்ணாய் மாறும் அலிகள் செய்து கொள்ளும் ‘குறி‘ நீக்க அறுவைச் சிகிச்சையை அத்தகவல் நினைவூட்டுகிறது. அடுத்து இக்கதையில் வரும் மாய எதார்த்த கற்பனைக்காக, ‘கடவுள்தன்மை‘ கட்டமைக்கப்பட்டுள்ளது.



பாலியல் கதைகளும் நீதி சொல்லும் என்பதற்கு இக்கதை சரியான சான்றாதாரமாகத் திகழ்கிறது. பாலியல் கதைதான் என்றாலும் இக்கதையில் அறக்கழிவான பதிவுகள் ஏதும் இல்லை. பாலியல் சார்ந்த செய்திகளும், காமம் கடந்து மிக நளினமாக, சுவையாகச் சொல்லப்பட்டுள்ளன.



இக்கதையை ‘வ.க.‘ அவர்கள் எழுதியனுப்பிய அதே வடிவத்தில் வாசகர்களுக்குத் தருகிறேன். இனிக் கதைக்குள் செல்லுங்கள்.




ஒருவன். ரொம்ப இரக்க சுபாவம் உள்ளவன்.

அவன் மனைவி பிள்ளை பெறும்போது பட்ட கஷ்டத்தைக் கண்டு ரொம்பவும் தவித்துப்போனான். மனவேதனைபட்டான். ‘சே, என்னலேதானே அவளுக்கு இந்தக் கஷ்டம். நான் அவ கூடப் படுக்காமல் இருந்தால், அவள் இப்படி செத்துப் பிழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிராதே!‘ என்று யோசித்தான்.




 யோசிக்க யோசிக்க, ‘எனக்கு இது இருக்கப்போய்த்தானே அவ கூடப் படுத்து, அவளைப் பண்ணணும்னு ஆசையும் துடிப்பும் வருது! அதனாலேதான் பிள்ளை உண்டாவது, பிள்ளை பொறக்கிறது முதலிய கஷ்டங்கள் எல்லாம் வருது‘ என்று அவனுக்குத் தோணலாயிற்று.




 அவனுடைய ‘பிரசவ வைராக்கியம்‘ வெறும் நினைப்பாக இருந்து விடவில்லை.

அவன் ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு மறைவிடத்திற்குப் போனான். கடவுளைப் பிரார்த்தித்தபடி தன்னுடைய ‘அதை‘ நறுக்கி எறிந்து, மண்ணில் புதைத்துவிட்டான். தக்க மருந்துகள் போட்டு, காயத்தை ஆற்றி, குணப்படுத்திக் கொண்டான். இதை எல்லாம் ரொம்ப ரகசியமாகச் செய்து முடித்தான். ஒரு ஈ, காக்கைக்குத் தெரியாது. அவ்வளவு சாமர்த்தியமாகச் செய்து தீர்த்தான். இதில் அவனுக்கு மிகுந்த திருப்தி.

பிள்ளை பெற்றவள் உரிய முறைப்படி உடம்பைத் தேற்றிக் கொண்டாள். நல்லபடியா எழுந்து நடமாடினாள். வேலைகளைச் செய்தாள். சந்தோஷமாக இருந்தாள்.




ஒருநாள் அவளுக்கு அந்த ஆசை ஏற்பட்டது. புருஷன்காரனோடு சிரித்துச் சிரித்துப் பேசினாள். இடித்து உரசினாள். சீவிச் சிங்காரித்து, தலைமுடித்து பூ வைத்துக் கொண்டு, தன் விருப்பத்தை பல வகையிலும் அவனுக்கு வெளிப்படுத்தினாள்.




ஆனால், அவனோ முன்னே மாதிரி ஈடு கொடுக்கலே. சுரத்தே இல்லாமல், ஒதுங்கி ஒதுங்கிப் போனான். ‘இருக்கட்டும், இருக்கட்டும், ராத்திரி என்கிட்டத்தானே வரணும்‘ என்று அவள் மனசில் எண்ணிக் கொண்டாள்.




ராத்திரி வந்தது. அவன் படுக்கையைப் போட்டு நீட்டி நிமிர்ந்தான். அவள் வழக்கமான சேட்டைகள் எல்லாம் பண்ணினாள். அவன் கட்டையாய்க் கிடந்தான். ‘சும்மா இருடீ. நமக்கு அதெல்லாம் எதுக்கு!‘ என்று முணுமுணுத்தான்.


‘அட என் ரிஷி மவனே’ என்று அவள் பழிப்புக் காட்டி, அவன் வேட்டியை விசுக்கென்று இழுத்து அவிழ்த்தாள். ‘ஐயோ, இது என்ன’ என்று அலறினாள். அங்கே அவன் ‘இது’ இல்லாமல் போனதுதான் காரணம்.


மேலே, அவன் நடந்ததைச் சொன்னான். அவளுக்கு அழுகை வந்தது. ஆத்திரம் வந்தது. பெருமையும் சந்தோஷமும்கூட ஏற்பட்டது. ‘இவருக்கு நம்மமேலே எவ்வளவு பிரியம் பார்த்தையா! எவ்வளவு அன்பும் ஆசையும் இருந்தா இப்படிச் செய்திருக்கமுடியும்’ என்று உருகிப்போனாள்.




பிறகு ஆசையோடு அவனைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு, ‘இதெல்லாம் உலகத்திலே ஏற்பட்டதுதானே! பொம்பிளையா இருந்தா புள்ளை உண்டாகிறது, கஷ்டப்படுறது, பெத்துப் பிழைக்கிறது எல்லாம்தான். இதெல்லாம் கடவுள் வகுத்த அமைப்பு. இதுக்குப் போயி நீங்க இப்படிப் பண்ணிக்கிடலாமா?’ என்றாள்.


‘சரி. நீங்க நான் சொல்றபடி கேக்கணும். நீங்க சுயநலத்தினாலே இப்படிச் செய்யலே. அதுனாலே கடவுள் மனசு இறங்குவாரு. நேரே கோயிலுக்குப் போயி தவம் இருங்க. கடவுள் வந்து என்ன வேணும்பாரு. நீங்க விசயத்தைச் சொல்லுங்க. எல்லாம் நல்லபடியா முடியும்’ என்று சொல்லி, பெண்டாட்டிக்காரி புருஷனை அனுப்பி வைத்தாள்.


அவனும் கோயிலுக்குப் போய், உண்ணாமல் தின்னாமல், தண்ணி கூடக் குடிக்காமல், கடுமையாகத் தவசு இருந்தான்.




கடவுள் வந்தார். ‘பக்தா, என்ன வரம் வேணும், கேள்’ னாரு.




அவன் விசயத்தைச் சொன்னான். தன் பெண்டாட்டி அனுப்பி வைத்தாள் என்பதையும் சொன்னான்.


‘உன் தூய அன்பை மெச்சினேன்’ என்று சொன்ன கடவுள் எதிரே பார்த்தார். காராம்பசு ஒன்று புல்மேய்ந்து கொண்டு நின்னுது. ‘சரி. அந்தப் பசுவின் மடு ஒன்றை நறுக்கி உனக்குப் பொருத்திக்கோ. அது ராத்திரி நேரங்களில் மனைவியைத் திருப்திப்படுத்தும் சாதனமாக விளங்கும். பகலில் எவ்வளவு பால் வேண்டுமானாலும் தரும்’ என்று சொல்லி விட்டு மறைந்து போனார்.


அவனும் அப்படியே செய்தான்.




வீட்டுக்கு வந்தான். வந்ததும் வராததுமாகவே, பெண்டாட்டி, ‘என்ன, போன விசயம் என்னாச்சு?’ என்று பறந்தாள்.


‘எல்லாம் நல்ல சமாச்சாரம்தான். உள்ளே வா’ என்று அவளை வீட்டுக்குள் கூட்டிப்போய் விவரத்தைச் சொல்லி அதையும் காட்டினான்.


அவள் கடவுளைக் கும்பிட்டு, பால் பீச்சினாள். ஒரு செம்பு நிறையக் கறந்தாள். இரண்டுபேரும் குடித்தார்கள். ரொம்ப ருசியாக இருந்தது.




அவள் ராத்திரி ரொம்ப நேரம் ஆகட்டும் என்று கூடக் காத்திருக்கவில்லை. காத்திருக்கமுடியலே அவளால். கருக்கல் நேரத்திலேயே அவனைக் கட்டிப் பிடித்துப் படுத்தாள். திருப்தியாக இருந்தது அவளுக்கு.




ஆகவே, அவர்களுக்குக் கவலையே இல்லை என்று ஆகிவிட்டது. பாலுக்குப் பாலும்ஆச்சு; சுகத்துக்கு சுகமும் ஆச்சு! ‘அதை’ப் பக்தியோடு, கடவுள் படத்து பக்கத்திலே வைத்து, தினமும் பூஜை செய்து வந்தாள்.




இப்படி நடந்து வருகிற நாளிலே ஒருநாள், பக்கத்து வீட்டுக்காரி, ‘ஏளா, கொஞ்சம் பாலு இருந்தாக் கொடேன்’ என்று கேட்டபடி வந்து சேர்ந்தாள்.




இவளும் தாராளமாகக் கொடுத்தாள்.




அவள் போய்விட்டு, பிறகு வந்து, ‘இது ஏது இந்தப் பாலு? எவ்வளவு ருசியா இருக்குங்கே! இவ்வளவு ருசியும் மணமும் உள்ள பாலை இதுவரை நான் குடிச்சதே இல்லை. எங்கே வாங்குறே பாலு?’ என்று அக்கறையாக விசாரித்தாள்.




இவளுக்குப் பெருமை தாங்கலே. தன் புருசனைப் பத்தியும், தன் பேரிலே அன்பு கொண்டு அவன் செய்த காரியத்தைப் பத்தியும், அப்புறம் கடவுளிடம் போய் வரம் வாங்கி வந்த விவரத்தையும் நீட்டி நீட்டிப் பேசினாள்.


‘ஏளா, இது என்ன அதிசயமா இருக்கு? இதெல்லாம் நெசமாத்தான் நடந்ததா?’ என்றாள் பக்கத்து வீட்டுக்காரி.


‘கண்ணாணை! பின்னே நான் பொய்யா சொல்லுதேன்?’ என்று சினந்து, இவள் அந்த அதிசய விஷயத்தையும் எடுத்துக் காட்டினாள்.


அடுத்த வீட்டுக்காரிக்கு பொறாமை பத்திக்கிட்டு வந்தது. மேலுக்கு ‘எல்லாம் ஆண்டவரோட கிருமை’ என்று சொல்லி வைத்தாள்.




வீடு திரும்பியதும் தன் புருசனை பிடிபிடி என்று பிடித்தாள் அவள். நீரும் சரியான ஆம்பிளையா? உமக்கு என்மேலேஆசை உண்டுமா? அன்பு உண்டுமா? பிரியம் உண்டுமா? - இப்படி அடுக்கி, அடுத்த வீட்டுப் புருசன் தன் பெண்டாட்டிக்குச் செய்த நன்மையைச் சொன்னாள். இப்படி தினம் காலையிலும் மாலையிலும் ‘கொடை கொடுத்து’ அவள் தன் புருஷனை சரிக்கட்டினாள். தன் கண் முன்னாலேயே அவன் ‘தம்பி’யை (ஆண்குறியை) வெட்டி எறியும்படி செய்தாள். தகுந்த பச்சிலைகள் கொண்டு பண்டுவம் பார்த்தாள். சரியானதும், அவனைக் கடவுளிடம் வரம்பெற அனுப்பி வைத்தாள்.




அவன் முன்னாலும் கடவுள் தரிசனம் கொடுத்தார். ‘என்ன வேணும்?’ என்று கேட்டார். அவன் வேண்டியதைச் சொன்னான்.




கடவுள் குறும்புத்தனமாகப் புன்னகை பூத்து எதிரே பார்த்தார்.




அப்பதான் ஒரு கழுதை, பெட்டைக் கழுதையை நினைத்து நீட்டிக்கிட்டு, யேவ் யேவ் என்று கத்தி, காமத்தைத் தணித்துக் கொண்டிருந்தது. மெதுமெதுவாக ‘அது’ சுருங்கிக்கிட்டிருந்தது.




கடவுள், கழுதையோட ‘சாமான்’ அந்த மனுசனுக்கு வந்து பொருந்தும்படி அருள்புரிந்துவிட்டு, மறைந்துபோனார்.




உடனேயே அவனுக்கு பெண்டாட்டி நினைப்பு எடுத்துவிட்டது. வெறிவேகத்திலே வீடு வந்து சேர்ந்தான்.




அவன் பெண்டாட்டிக்காரி ரொம்ப ஆவலாக புருஷன் வரவை எதிர்பார்த்து, வாசலில் நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும், வாயெல்லாம் பல்லாகி, ‘என்னா, போன காரியம் என்னாச்சு’ என்று கேட்டாள்.




அவன்தான் அவளையே எண்ணிக்கிட்டு, அதே நினைப்பாக வாறானே! அவளைக் கண்டதும் சும்மா விடுவானா? வேகமாக அவளை இழுத்துக்கிட்டு வீட்டுக்குள்ளே போனான். அவசரம் அவசரமாக அவளை அனுபவிக்க ஆரம்பிச்சான். கழுதைக் காமத்தோடு அவளை அனுபவிக்க அவளுக்கு ‘இது’ கிழிஞ்சே போச்சு. அவ செத்தே போனாள்.




அதுதான் பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க - பேராசைப் படக்கூடாது; பேராசைப்பட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும்; பொறாமை குடியையே கெடுத்துப் போடுமின்னு. பெரியவங்க சும்மாவா சொன்னாங்க? எல்லாம் அனுபவ ஞானத்தின் மீது பிறந்த பேச்சுக்கள்தான்.

Monday, 22 July 2013

தாத்தா சொல்லும் கதைகள் 5

கர்வம் தவிர்

மலை முகடுகளில் மேகம் தவழ்ந்து விளையாடியது. மாலையில் இதமான குளிர்ந்த காற்று வீசியது. குழந்தைகள் கதை கேட்பதற்காக காத்திருந்தார்கள். குழந்தைகளைப் பார்த்து கைகளை அசைத்தபடியே வந்த கண்ணாடித் தாத்தா வழக்கமாக அமரும் பளபளப்பான கல்லின் மேல் உட்கார்ந்தார். தாத்தாவின் முன்னால் உட்கார்ந்த குழந்தைகள், ``கதை சொல்லுங்க தாத்தா`` என்று ஒரே குரலில் கூறினார்கள். தாத்தா தொண்டையைச் செருமி தன் குரலைச் சரி செய்துக் கொண்டு கதை சொல்ல ஆரம்பித்தார்.

`` ஒரு காட்டில் எல்லாவிதமான மிருகங்களும் வாழ்ந்தன. சிங்கம், புலி, கரடி போன்ற வலிமை மிக்க மிருகங்கள் மான், முயல், நரி போன்ற மிருகங்களை வேட்டையாடி அவற்றைக் கொன்று தின்று வாழ்ந்து வந்தன. ஒரே காட்டில் வாழ்ந்ததால், மாமிசம் உண்ணும் மிருகங்களுக்கு பயந்து தாவரங்களை உண்ணும் மிருகங்கள் வாழ்ந்தன.

வேட்டையாடும் மிருகங்களிடம் இருந்து மற்ற மிருகங்கள் தப்பித்து உயிர் வாழ படாத பாடுபட்டன. எனவே நரி மற்ற மிருகங்களைப் பார்த்து, ``சிங்கம், புலி போன்ற மிருகங்களிடமிருந்து தப்பிக்க நாமெல்லாம் ஒன்று கூடி சிந்தித்து ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்`` என்று கூறியது. நரியின் யோசனையை முயல், ஆமை போன்ற மிருகங்கள் வரவேற்றன. ``நாம் அனைவரும் இந்தக் காட்டில் உள்ள மழைக்காத்தான் என்ற பாறையின் அடியிலுள்ள குகையில் வரும் வெள்ளிக்கிழமை காலையில் ஒன்று கூடி பேசி ஒரு முடிவெடுப்போம்`` என்று நரி கூறியது.

நரியின் யோசனையை மற்ற மிருகங்களிடம் சென்று தகவலாகச் சொல்லும் பொறுப்பை ஆமை கேட்டது. நரி ஆமையைப் பார்த்து ``நீ மெதுவாக நடந்து சென்று ஒவ்வொரு மிருகத்தையும் பார்த்து தகவல் சொல்வதற்கு ஒரு மாத காலம் ஆகும் எனவே அந்தப் பொறுப்பை முயலிடம் ஒப்படைப்போம்`` என்றது நரி. முயலும் மகிழ்ச்சியுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. முயல் ஒவ்வொரு மிருகத்தையும் தனித்தனியே சந்தித்து செய்தியைக் கூறும் போது ஒவ்வொரு மிருகமும் கூட்டத்திற்கு நான்தான் தலைமை வகிப்பேன் என்று முயலிடம் கூறின. முயல், ``முதலில் நாம் ஒரு இடத்தில் ஒன்று கூடுவோம். அதன்பிறகு நம்மில் யார் தலைவராக இருப்பது என்பது பற்றி தீர்மானிப்போம்`` என்று சாமர்த்தியமாக மற்ற மிருகங்களிடம் கூறியது.

யானை முதல் எலி வரை உள்ள மிருகங்கள் அனைத்திற்கும் முயல் தவறாமல் அழைப்பு விடுத்தது. குறிப்பிட்ட நாளில், மழைக்காத்தான் பாறையின் அடியில் உள்ள குகையில் சிங்கம், புலி தவிர்த்த மிருகங்கள் எல்லாம் ஒன்று கூடின. ஆனால் அந்தக் கூட்டத்திற்கு மான் மட்டும் வரவில்லை. யானை நரியைப் பார்த்து, ``நாம் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி இருக்கிறோம் மான் மட்டும் ஏன் வரவில்லை`` என்று கேட்டது. நரி, மான் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை. நம்மில் யாராவது ஒருவர் போய் மானை அழைத்து வருவோம் என்றது.

யானை, பூனையைப் பார்த்து நீதான் பார்க்க புலி மாதிரி இருக்கிறாய், நீ வேகமாகச் சென்று மானை அழைத்து வா என்றது. உருவத்தில் மிகப் பெரிய மிருகமான யானை சொன்னதைக் கேட்ட பூனையும் மறு பேச்சு பேசாமல் மானைத் தேடி ஓடியது. காட்டில் பல இடங்களில் தேடியும் மானைக் கண்டு பிடிக்க முடியவில்லை. கடைசியில் ஒரு குளத்தில் நீர் அருந்திக் கொண்டு இருந்த மானைப் பார்த்து, ``மிருகங்களின் கூட்டத்திற்கு நீ மட்டும் ஏன் வரவில்லை? யானை அண்ணா உன்னைக் கூட்டிக் கொண்டு வரும்படி என்னை அனுப்பி வைத்தார் என்று பவ்வியமாகக் கூறியது.

மான் கர்வத்துடன், இந்தக் காட்டில் வாழும் மிருகங்களிலேயே நான்தான் மிகவும் அழகாக இருக்கிறேன். நான் துள்ளி துள்ளி ஓடும் அழகை நீ பார்த்திருக்கிறாயா? என் கொம்புகளைப் பார் எவ்வளவு அழகாக இருக்கின்றன. இந்தக் காட்டில் வாழும் எந்த மிருகமும் என்னைப் போல் அழகாக இல்லை. எனக்கு துன்பம் வரும்போது என்னை நான் காப்பாற்றிக் கொள்வேன். எனக்கு யாருடைய உதவியும் ஆலோசனையும் வேண்டாம். நரி கூட்டி இருக்கும் அந்தக் கூட்டத்திற்கு நான் வரமாட்டேன். நரி தந்திரமான மிருகம். அது நம்மை எல்லாம் ஒரே இடத்தில் கூட்டி ஒரே நேரத்தில் கொன்றுவிட ஏதோ சதித் திட்டம் தீட்டி இந்தக் கூட்டத்தைக் கூட்டுகிறது. நரி இருக்கும் இடத்திற்கு நான் வரமாட்டேன். யானை உருவத்தில்தான் பெரிய மிருகமாக இருக்கிறது. அதற்கு மூளை மிகச் சிறியது. நரியின் தந்திரம் தெரியாமல் யானையும் அங்கு சென்றிருக்கிறது. நான் நரியின் முகத்தில் என்றும் விழிக்கவே மாட்டேன். எனவே உங்கள் கூட்டத்திற்கு வர எனக்கு இஷ்டம் இல்லை. யானையிடம் சென்று என் முடிவைக் கூறிவிடு என்று பூனையைப் பார்த்து மான் கர்வத்துடன் கூறியது.

பூனை மிருகங்களின் சபைக்கு சென்று மான் கூறியதை அப்படியே சொன்னது. அதைக் கேட்ட யானை, ``மானிற்கு தான் அழகாக இருக்கிறோம் என்ற ஆணவம் இருக்கிறது. அழகால் ஆபத்து வரும் என்ற உண்மையை ஒருநாள் மான் உணர்ந்து கொள்ளும் அதன்பின் அது நம்மைத் தேடி வரும். அதுவரை நாம் மானை விட்டுவிடுவோம்`` என்று கூறியது. யானையின் கூற்றை மற்ற மிருகங்களும் ஏற்றுக் கொண்டன. திட்டமிட்டபடி மிருகங்கள் கூடிப் பேசின. அன்றைய கூட்டத்தில் யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து பேசப்பட்டது.

உருவத்தில் பெரியதாக உள்ள யானையே தலைவராக இருக்கவேண்டும் என்று மற்ற மிருகங்கள் ஏகோபித்த குரலில் கூறின. யானையும் தலைவராக இருக்க சம்மதித்தது. நரியை செயலராக இருக்க யானை பரிந்துரை செய்தது. மற்ற மிருகங்களும் யானையின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டன. அப்போது தூரத்தில் சிங்கம் ஒன்று உருமியது. சிங்கத்தின் உருமல் சத்தம் கேட்டு, கூடியிருந்த அனைத்து மிருகங்களும், ஆளுக்கு ஒரு திசையில் ஓடி காட்டில் ஒளிந்து கொண்டன.

சிங்கத்தின் உருமல் சத்தம் கேட்டு மானும் ஒரு புதருக்குள் ஓடியது. மான் வேகமாக ஓடியபோது, மானின் அழகிய கொம்பு ஒரு முட்புதருக்குள் சிக்கிக் கொண்டது. எனவே, மானால் அங்கிருந்து நகர முடியவில்லை. மானின் கொம்பு முட்புதருக்குள் சிக்கி இருப்பதைப் பார்த்த நரி, யானையிடம் சென்று கூறியது. உடனே யானை வேகமாக அங்கு சென்று, முட்செடியை வேரோடு தன் துதிக்கையால் வளைத்துப் பிடித்து தூக்கியது. நரி, முட்செடியின் கிளைகளில் இருந்து மானின் கொம்பை விடுவித்தது. எனவே, மான் முட்புதரின் பிடியில் இருந்து விடுபட்டது.

அழகான கொம்பு இருப்பதால், துள்ளி துள்ளி ஓடுவதால் கர்வம் கொண்டு இருந்த மான் அன்று தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டது. தக்க நேரத்தில் வந்து தன்னை காப்பாற்றிய யானைக்கும், நரிக்கும் மான் நன்றி கூறியது. `இனிமேல் நான் அழகாக இருக்கிறேன் என்று கர்வம் கொள்ள மாட்டேன் என்று கர்வம் கொள்ள மாட்டேன் நானும் உங்களில் ஒருவனாக அடுத்து நடக்க இருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன்` என்று மான் கூறியது. என்று கதையைக் கூறி முடித்த தாத்தா, நாம் பெற்றிருக்கிற தனித்திறமையால், தனிச்சிறப்பால், நமக்கு தன்னம்பிக்கை வர வேண்டுமே தவிர, `தான்` என்ற ஆணவமோ, கர்வமோ வந்துவிடக்கூடாது என்ற நல்ல கருத்தை இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது`` என்றார்

தாத்தா சொல்லும் கதைகள் 4

`மூர்த்தியும் கீர்த்தியும்..!

 தாத்தா இன்றைக்கு பறவைகளைப் பற்றிய கதை சொல்லுங்க`` என்று குழந்தைகள் கூறின. கண்ணாடித் தாத்தா தன் கதை நினைவுப் பெட்டகத்தில் இருந்து பறவைகளின் கதையைத் தேர்ந்தெடுத்துச் சொல்ல ஆரம்பித்தார்.

கதை கேட்க கூடி இருந்த குழந்தைகளில் மூர்த்தி என்ற பையன் மிகவும் குள்ளமாக இருந்தான். குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப இருக்க வேண்டிய உயரத்தில் இருந்து மூர்த்தி என்ற பையனின் உயரம் குறைவாக இருந்தது. குள்ளமாக இருக்கும் மூர்த்தி கெட்டிக்காரப் பையனாகவும், படுசுட்டியாகவும் இருந்தான். எனவே, கண்ணாடித் தாத்தா மூர்த்தியைப் பார்க்கும் போதெல்லாம், அவனை உற்சாகப் படுத்துவதற்காக, `மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது` என்று சொல்வார். இன்றைக்கு மூர்த்திக்காகவே இந்தக் கதையைச் சொல்கிறேன் என்று குழந்தைகளைப் பார்த்துக் கூறிய தாத்தா, கதை சொல்ல ஆரம்பித்தார். குழந்தைகளோடு மூர்த்தியும் சேர்ந்து ``ம்... கதை சொல்லுங்க`` என்று குரல் கொடுத்தான்.

``ஒரு பெரிய காடு... அந்தக் காட்டில் உள்ள மரங்களில் எல்லாவிதமான பறவைகளும் கூடுகட்டி வாழ்ந்து கொண்டிருந்தன. ஒருநாள் கழுகு பறவைகளை எல்லாம் ஒரே இடத்தில் கூடும்படி உத்தரவிட்டது. கழுகாரின் ஆணைப்படி எல்லாப் பறவைகளும் காட்டில் உள்ள பெரிய ஆலமரத்தின் அடியில் கூடின. ஆலமரத்தின் பெரிய கிளை ஒன்றின் மேல் அமர்ந்து கொண்டு கழுகு கூட்டத்திற்கு வந்திருக்கும். மற்றப் பறவைகளை நோட்டமிட்டது. குருவி, கிளி, மைனா, காகம், செம்போத்து, மரங்கொத்தி, குயில், கொக்கு, நாரை, பருந்து என்று எல்லாவிதமான பறவைகளும் கூட்டத்திற்கு வந்திருந்தன.
மற்ற பறவைகளைப் பார்த்து கழுகு, ``பறவைகளா... இன்றைக்கு உங்களுக்கு நான் ஒரு போட்டி வைக்கப் போகிறேன். அந்தப் போட்டியில் ஜெயிக்கிறவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன். அதோடு `பறவை வீரன்` என்ற பட்டமும் தருவேன்`` என்றது.

``போட்டி நடத்துவது சரி கழுகாரே நீங்களும் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறீரா?`` என்று கேட்டது கிளி. கழுகு, ``நான் தானே போட்டியை நடத்துகிறேன். எனவே போட்டியில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை. ஆனால் நான்தான் நடுவராக இருந்து போட்டியின் முடிவை அறிவிக்கப் போகிறேன்...`` என்றது.

``சரி போட்டியை எப்போது எங்கு நடத்துவீர்கள்?`` என்று கேட்டது மைனா. நாளை காலை பத்து மணிக்கு போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பறவைகள் எல்லாம் இதே இடத்திற்கு வந்து விடவேண்டும் என்று கூறியது கழுகு.

மரங்கொத்தி, ``பருந்துதான் மிக உயரமாக வானத்தில் பறந்து பரிசைத் தட்டிச் செல்லப் போகிறது இதற்கு போட்டி வேறு தேவையா?`` என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டது. பறவைகளின் தலைவனான கழுகு, ``சரி கூட்டம் கலையலாம், நாளை காலையில் அனைவரும் மறக்காமல் போட்டியில் கலந்துகொள்ள அல்லது நடக்க இருக்கும் போட்டியை வேடிக்கை பார்க்க மறக்காமல் இதே இடத்திற்கு வந்துவிடுங்கள்`` என்று மீண்டும் கூறிவிட்டு கழுகு தன் நீளமான சிறகுகளை விரித்து வானத்தில் `கிவ்`வென்று பறக்கத் தொடங்கியது.
அன்று இரவெல்லாம் பறவைகள் ``நாளை நடக்க இருக்கும் போட்டியில் யார் ஜெயிக்கப் போகிறார்களோ?`` என்று சிந்தித்தபடியே தூங்கின. மறுநாள் காலையில் வழக்கத்தைவிட சற்று நேரத்திற்கு முன்பாகவே தூங்கி எழுந்த பறவைகள் அவசர அவசரமாக காலையில் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு காலை ஒன்பது மணிமுதலே அந்த ஆலமரத்தின் அடியில் வந்து அமரத் தொடங்கின. எல்லாப் பறவைகளும் ஓரே இடத்தில் கூடி குரல் எழுப்பியதால் ஆலமரத்தின் அடியில் இருந்து வினோதமான குரலோசை காற்றில் மிதந்து சென்றது.

சரியாக பத்துமணி ஆவதற்கு பத்து நிமிடம் இருக்கும்போது, போட்டியை நடத்தும் கழுகு வந்து பெரிய மரக்கிளையில் அமர்ந்தது. கழுகார் போட்டியின் நிபந்தனைகளை மற்ற பறவைகளுக்கு அறிவித்தார். சரியாக பத்துமணிக்கு நான் வானத்தில் பறந்து வட்டமிட்டபடி, ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்வேன். `மூன்று` என்று நான் சொன்னதும் போட்டி ஆரம்பமாகும். சரியாக பத்து நிமிட நேரம் மட்டும் ஒரே சமயத்தில் வானத்தில் எல்லாப் பறவைகளும் பறக்க வேண்டும். நான், வானத்தில் உயரே, உயரே பறந்து போட்டியைப் பார்வை இடுவேன். பத்து நிமிட நேரம் ஆனதும், நான் காலில் கவ்விக் கொண்டு செல்லும் ஒரு `பூ` கொடியை கீழே போடுவேன். உடனே எல்லாப் பறவைகளும் வானத்தில் பறப்பதை நிறுத்திவிட்டு இந்த ஆலமரத்தின் கிளையில் வந்து அமரவேண்டும் என்றது.

போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்த மற்றப் பறவைகள், கழுகாரின் நிபந்தனைகளைக் கேட்டு சரி என்றன. பத்துமணி ஆவதற்கு, பத்திநிமிடம் இருக்கும்போதே, கழுகு தன் கால்களுக்கு இடையில், காட்டில் கிடந்த ஒரு முல்லைக் கொடியை பிடித்துக் கொண்டு வானத்தில் பறந்து வட்டமிட்டது. போட்டியில் கலந்து கொள்ள சிட்டுக்குருவியும் வந்திருந்தது. மயில் சிட்டுக்குருவியைப் பார்த்து, `உயரே, உயரே பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாக முடியுமா? சிறிய பறவையான உன்னால் எப்படி இந்தப் போட்டியில் ஜெயிக்கமுடியும்?` என்று கேட்டது.

மயிலைப் பார்த்து சிட்டுக்குருவி இவ்வளவு பெரிய உடம்பை வைத்துக் கொண்டு, உன்னால் எப்படி மிக உயரமாகப் பறக்க முடியும்? பறவைகளுக்கு இடையில் அழகான பறவை எது? என்று ஒரு போட்டி வைத்தால் நீ உன் நீளமான தோகையை வைத்துக் கொண்டு அதை விரித்து ஆடி, போட்டியில் ஜெயிக்கலாம். இது உயரமாகப் பறக்கும் போட்டி நீயே போட்டியில் கலந்து கொள்ளும்போது, நான் ஏன் மிகச் சிறிய உடம்பை வைத்துக் கொண்டு இந்த போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது? என்று எதிர்க் கேள்வி கேட்டது.

வானத்தில் வட்டமிட்டபடி பறந்து கொண்டு இருந்த கழுகார், தன் கால்களில் பிடித்திருந்த பூங்கொடியை அசைத்து, `ஒன்று, இரண்டு, மூன்று` என்று உரக்கக் கூறியது. உடனே பறவை இனங்கள் எல்லாம் வானத்தில் பறக்கத் தொடங்கின. ஒரே நேரத்தில் பல்வேறு வடிவங்களையும் கொண்ட வித, விதமான பறவைகள் வானத்தில் பறக்கும் அந்த அதிசயக் காட்சியை காட்டில் வாழும் மிருகங்கள் எல்லாம் பார்த்து பரவசப் பட்டன. கழுகார் வானத்தில் மிக உயரமாகப் பறந்து வட்டமிட்டபடி பறவைகளுக்கு இடையே நடைபெறும் அந்தப் போட்டியைக் கண்காணித்தார்.

சரியாக பத்துநிமிடம் ஆனதும் கழுகார் தன் கால்களுக்கு இடையில் கவ்விப் பிடித்திருந்த பூங்கொடியை கீழே நழுவ விட்டார். வானத்தில் உயரமாகப் பறந்து கொண்டிருந்த அனைத்துப் பறவைகளும் தரை இறங்கின. ஆலமரத்தடியில் கூடிய பறவைகளைப் பார்த்து கழுகார், இப்ப நான் போட்டியின் முடிவை அறிவிக்கப் போகிறேன் என்றது. போட்டியின் முடிவைத் தெரிந்து கொள்ள அனைத்துப் பறவைகளும் ஆவலாக இருந்தன.
கழுகார், ஆலமரத்தின் உயரமான கிளை ஒன்றில் அமர்ந்து கொண்டு இன்று நடைபெற்ற போட்டியில் மிக உயரமாக வானத்தில் பறந்த ``பறவை வீரன்`` என்ற பட்டத்தை சிட்டுக் குருவிக்கு அளிக்கிறேன் என்றது. கழுகாரின் தீர்ப்பைக் கேட்டதும் பருந்திற்கு கோவம் வந்துவிட்டது. பருந்து கழுகைப் பார்த்து, கழுகாரே இன்று நடைபெற்ற போட்டியில் நான்தான் வானத்தில் மிக உயரமாகப் பறந்தேன். ஆனால் இன்று நடைபெற்ற போட்டியில் கலந்து கொள்ளாத சிட்டுக்குருவி ஜெயித்ததாக அறிவிப்பது என்ன நியாயம்? என்று கேட்டது.

கழுகார், சிரித்தபடியே! அட முட்டாள் பருந்தே, சிட்டுக்குருவி போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்று உன்னிடம் யார் கூறியது. சிட்டு குருவி உன் முதுகின் மேல் உட்கார்ந்திருந்தது. அதைக்கூட கவனிக்காமல் நீ வானத்தில் சிட்டுக்குருவியைச் சுமந்தபடி வானத்தில் பறந்தாய். என்னுடைய கணக்குப்படி, உன்னைவிட உயரமான உயரத்தில் பறந்தது சிட்டுக் குருவிதான் என்று விளக்கம் கூறினார், நடுவரான கழுகார்.
மயிலைப் பார்த்து அர்த்த புஷ்டியுடன் கண்ணடித்தது சிட்டுக்குருவி. கழுகு போட்டியில் வெற்றி பெற்ற சிட்டுக்குருவிக்கு ஒரு முத்து மாலையை பரிசாக அதன் கழுத்தில் போட்டது. பருந்தைத் தவிர்த்து மற்றப் பறவைகள் எல்லாம் தன் சிறகுகளை அசைத்து , தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தன. இதுதான் பறவைகள் நடத்திய போட்டியில் சிட்டுக்குருவி, வெற்றி பெற்ற கதை என்று கதையைக் கூறிய கண்ணாடித் தாத்தா, ``குழந்தைகளா.. `உருவுகண்டு எள்ளாமை வேண்டும்` என்று வள்ளுவர் கூறியுள்ளார். ``கடுகு சிறுத்தாலும் காரம் போகாது`` என்பதும், சிறிய உளிதான் மலையைத் தகர்க்கும் என்பதும் பழமொழிகள். எனவே, எளியார்களாலும், மெலிந்தவர்களாலும், சிறியவர்களாலும் எதையும் சாதிக்க முடியாது என்று நினைக்கக் கூடாது. அவர்களும் நம்மைப்போல் ஆற்றல் உள்ளவர்கள்தான் என்ற கருத்தை வலியுறுத்தத் தான் சிட்டுக்குருவியின் கதையை உங்களுக்குக் கூறினேன் என்று கதை கூறும் நீதிக் கருத்தையும் கூறிமுடித்தார்`` தாத்தா.

தாத்தா சொல்லும் கதைகள் 3

புத்தியுள்ளவன் பலவான்..!


கண்ணாடித் தாத்தா கதை கேட்கக் கூடி இருந்த பிள்ளைகளைப் பார்த்து, ``இன்றைக்கு நான் உங்களுக்கு சொல்லப் போகிற கதை மிகவும் பழமையானது. நான் உங்களைப் போல சின்னப் பிள்ளையாக இருந்தபோது என் தாத்தா எனக்குச் சொன்ன கதை இது என்ற பீடிகையுடன் கதையை ஆரம்பித்தார்.

``அப்படியா... அப்ப சொல்லுங்க`` என்றார்கள் குழந்தைகள் ஆர்வத்துடன்... தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்.

மலையடிவாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு குளம் இருந்தது. மலையில் பெய்கிற மழையால் பெருக்கெடுத்து வருகிற வெள்ளம் கால்வாய் வழியாக அந்த கிராமத்தைக் கடந்து சென்றது. கால்வாயில் வருகிற நீரை அக்கிராமத்து மக்கள் ஊரை அடுத்த பள்ளத்தாக்கில் குளம் வெட்டி, அதில் தேக்கி வைத்து, அக்குளத்து நீரை வயலுக்குப் பாய்ச்சி மகசூல் செய்து வந்தார்கள்.

குளத்தில் நண்டு, தவளை மற்றும் பல்வகை மீன்கள் வாழ்ந்து வந்தன. கோடைக்காலம் வந்ததும் குளத்து நீரின் அளவு குறைந்தது. அந்தக் குளத்தில் ஒரு கொக்கு மேடான இடத்தில் நின்று கொண்டு தினமும் அந்தப் பக்கம் நீந்தி வரும் மீன்களைக் கொத்தித் தின்று வாழ்ந்து வந்தது. நாளாக, நாளாக குளத்தில் தண்ணீர் வற்றிக் கொண்டே இருந்தது. குளத்தில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றிவிட்டால், குளத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் குளத்தில் உள்ள மீன்களை எல்லாம் பிடித்து விற்று விடுவார்கள் என்பது கொக்குக்குத் தெரியும்.

இந்த குளத்து மீன் மிகவும் ருசியாக இருக்கும். குளம் முழுவதுமாக வற்றும் முன்பாக இந்தக் குளத்தில் உள்ள மீன்களை எல்லாம் பிடித்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தது கொக்கு. பேராசைபிடித்த கொக்கு குளத்தில் வாழும் மீன்களை எல்லாம் பிடித்துக் கொண்டு செல்ல ஒரு தந்திரம் செய்தது. குளத்தின் நடுவில் மேடான ஓர் இடம் இருந்தது. அதை மண்குதிர் என்று கிராமத்து மக்கள் சொல்வார்கள்.

குளத்தின் நடுவிலுள்ள மண்குதிரில் போய் நின்று கொண்ட கொக்கு அங்கு நீந்திவந்த கெண்டை மீனிடம், ``தம்பி நான் உனக்கு ஒரு செய்தியைச் சொல்கிறேன். அதை நீ, உன் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் போய் சொல்`` என்றது. கெண்டை மீன், ``அது என்ன செய்தி என்று ஆர்வத்துடன் கேட்டது. தம்பி, நான் குளத்தின் மேடான பகுதியில் மண் குதிரில் நின்று கொண்டிருந்தேன். நேற்று இந்தக் குளத்தின் கரையில், நான்கு பேர் நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள். அதை நான் கேட்டேன். அவர்கள், இன்னும் ஒரு வாரத்தில் இந்தக் குளத்தை அழிக்கப்போவதாகவும், குளத்தில் உள்ள மீன்களை எல்லாம் பிடித்து விற்பனை செய்யப் போவதாகவும் பேசிக் கொண்டார்கள் எனவே இன்னும் ஒருவாரத்தில் நீங்கள் எல்லாம் செத்து விடுவீர்கள். ஆனால் நான் நினைத்தால் உங்களை எல்லாம் காப்பாற்ற முடியும் என்று நயவஞ்சகமாக பேசியது.

கொக்கு சொன்னதைக் கேட்ட கெண்டை மீனுக்கு, தண்ணீருக்குள் இருக்கும்போதே வேர்த்துக் கொட்டியது. கொக்கைப் பார்த்து, கெண்டை மீன் அப்படியென்றால் நீங்கள் சொன்ன செய்தியை இந்தக் குளத்தில் உள்ள எல்லா மீன்களிடமும் நான் இப்போதே சொல்கிறேன்`` என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டது. கெண்டை மீன் நேரே, விரால் மீனிடம் சென்று கொக்கு சொன்ன செய்தியைக் கூறியது. அந்த குளத்தில் உள்ள மீன்களுக்கு எல்லாம் விரால்மீன்தான் தலைவராக இருந்தது.

விரால் மீன் உடனே அந்த குளத்தில் உள்ள மீன்களை எல்லாம் ஒரு இடத்தில் கூட்டி, அவைகளிடம், கொக்கு சொன்ன செய்தியைக் கூறியது. விரால் மீன் சொன்ன செய்தியை கேட்ட மற்ற எல்லா மீன்களும் பயந்து நடுங்கின. விரால் மீன் என்ன முடிவெடுக்கிறதோ... அதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம்`` என்று குளத்தில் வாழும் எல்லாவகை மீன்களும் ஒருமித்த குரலில் கூறின. விரால் மீன் நாளைக் காலையில் நான் கொக்கைச் சந்தித்துப் பேசுகிறேன்`` என்றது. மறுநாள் காலையில் வழக்கமாக நிற்கும் மண்குதிருக்கு கொக்கு பறந்து வந்தது.

கொக்கின் வருகைக்காகக் காத்திருந்த விரால் மீன், கொக்கைப் பார்த்து நீர் எப்படி எங்களை எல்லாம் காப்பாற்ற முடியும்?`` என்று கேட்டது. கொக்கு விரால் மீனிடம், நான் வானத்தில் பறந்து திரிகிறவன், எனக்கு இந்தப் பகுதியில் உள்ள குளங்களைப் பற்றி நன்கு தெரியும், நீங்கள் தற்போது வசிப்பது சின்னஞ்சிறிய குளம். அதிலும் தண்ணீர் வற்றிவிட்டது. ஆனால் சற்று தொலைவில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. அது கடல் போல விரிந்து பரந்து கிடக்கிறது. எந்தக் கோடைகாலமானாலும் அதில், `கெத்கெத்` என்று தண்ணீர் கிடக்கும். இந்தக் குளத்தில் உள்ள உங்களை நான் மெல்ல நோகாமல் பூப்போல என் அலகால் கொத்தி எடுத்துக் கொண்டு பறந்து சென்று அந்தக் குளத்தில் விட்டுவிடுவேன்.

பெரிய குளத்தில் நீங்கள் நன்றாக நீந்தி மகழலாம். உங்களுக்குத் தேவையான உணவும் தாராளமாக அந்தக் குளத்தில் கிடைக்கும். குளம் வற்றிவிடுமே என்ற கவலையும் வேண்டாம். நீங்கள் பல்லாண்டு காலம் மகிழ்ச்சியாக அந்தக் குளத்தில் வாழலாம். ஏற்கனவே அந்தக் குளத்தில் வாழும் மற்ற மீன்களுடன் நட்புக் கொண்டு சந்தோஷமாக வாழலாம் என்று நயவஞ்சமாகப் பேசியது. கொக்கின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் விரால் மீனின் காதில் தேனாகப் பாய்ந்தது. கொக்கின் வார்த்தைகளை விரால் மீன் முழுமையாக நம்பியது. எனவே, விரால் மீன் மற்ற மீன்களை எல்லாம் ஒரு இடத்தில் கூட்டி அவைகளிடம் கொக்கு சொன்னதை எல்லாம் கூறியது. விரால் மீனின் முடிவை ஏற்பதாக மற்ற மீன்களும் கூறின.

விரால் கொக்கை முழுமையாக நம்பியது. இன்றிலிருந்து நாம் ஒவ்வொரு வரும் வரிசையாக மண் குதிரின் அருகில் செல்வோம். கொக்கு நம்மைக் கொத்திக் கொண்டு சென்று பெரிய குளத்தில் விட்டுவிடும் என்று கூறியது. கொக்கும் விரால் மீனும் பேசிக் கொண்டதை எல்லாம், குளத்தின் கரையில் ஒரு பொந்தில் இருந்த நண்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அன்று காலை முதல், வரிசையாக வந்து நின்ற மீன்களை எல்லாம் கொக்கு மகிழ்ச்சியுடன் கொத்திக் கொண்டு சென்று, ஒரு காட்டின் நடுவில் இருந்த பாறையின் மேல் போட்டது. பாறையின் சூட்டில் போய் விழுந்த மீன்கள் துடிதுடித்துச் செத்தன். மீன்கள் ஒவ்வொன்றும் துடிதுடித்துச் சாவதைக் கண்டு கொக்கு சிரித்தது. மீன்கள் எல்லாம் செத்து பாறையின் சூட்டில் கருவாடான பிறகு, நம் தேவைக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் தின்று கொள்ளலாம் என்று நினைத்து மகிழ்ந்தது

மீன்களை கொக்கு கடத்திச் செல்வதைப் பார்த்த நண்டு மறுநாள் காலையில் கொக்கிடம் வந்து, ``அண்ணா என்னையும் அந்த பெரிய குளத்தில் கொண்டுபோய் சேர்த்துவிடு என்றது. கொக்கிற்கு ரொம்ப நாளாக, நண்டை உலர வைத்துச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனவே, இன்று உன்னை முதலில் கொண்டு பொய் அந்தக் குளத்தில் விடுகிறேன் என்றது.


நண்டு உருவத்தில் பெரியதாக இருந்தது. எனவே கொக்கால் அதன் அலகைக்கொண்டு நண்டைக் கொத்த முடியவில்லை. நண்டு, கொக்கிடம், `அண்ணே நீளமான உங்கள் கழுத்தை நான் என் கால்களால் கவ்விக் கொள்கிறேன். நீங்கள் என்னை அந்த பெரிய குளத்தில் கொண்டு போய்விட்டு விடுங்கள்` என்றது. நண்டின் யோசனையும் கொக்கிற்கு சரி என்று பட்டது. எனவே, கொக்கு குனிந்து கொடுத்தது. நண்டு கொக்கின் கழுத்தைப் பிடித்துக் கவ்விக்கொண்டு, `ம் போகலாம்` என்றது கொக்கு காட்டில் உள்ள பாறைக்கு பறந்து சென்றது.

பாறைக்கு மேலே பறந்து செல்லும்போது நண்டு கீழே பார்த்தது. பாறையில் மீன்கள் எல்லாம் செத்துக் கிடந்தன. அந்தக் காட்சியை கண்ட நண்டிற்கு, கொக்கு மீன்களுக்கு செய்த துரோகம் புரிந்தது. நம்பிக்கைத் துரோகம் செய்த இந்த கொக்கை இனியும் உயிரோடு விட்டால், நீர் வாழும் இனங்களை எல்லாம் கூண்டோடு அழித்துவிடும். எனவே, தாமதியாமல் இந்தக் கொக்கைக் கொன்றுவிட வேண்டும் என்று முடிவு செய்த நண்டு, கொக்கின் கழுத்தில் கவ்விப் பிடித்திருந்த தன் பிடியை இறுக்கியது.

நண்டே என்ன காரியம் செய்கிறாய் என் கழுத்தை இறுக்காதே. நான் செத்துவிடுவேன் என்றது கொக்கு. நண்டு, `நீ மீன்களை எல்லாம் நம்ப வைத்துக் கொன்றுவிட்டாய். எனவே, இப்போது நான் உனக்குத் தண்டனை கொடுக்கிறேன் என்று கூறிக் கொண்டே கொக்கின் கழுத்தை மேலும் மேலும் இறுக்கியது. எனவே, மூச்சுத் திணறிய கொக்கும் பாறையின் மேல் விழுந்து உயிரை விட்டடு. கொக்கு செத்தபிறகு, நண்டு, மெல்ல ஊர்ந்து பாறையைவிட்டு, நீர் பிடிப்பான இடத்தை நோக்கி நடந்து சென்று உயிர் பிழைத்தது` என்று கதையைக் கூறி முடித்த தாத்தா கதை கேட்டுக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்து, பறக்கும் வல்லமை கொண்ட பெரிய பறவையான கொக்கையே சிறிய நண்டு, தன் புத்தி கூர்மையால் கொன்று, இனி இறக்க இருந்த மீன்களின் உயிரைக் காப்பாற்றி விட்டது.

சிந்திக்கும் ஆற்றல் இருந்தால் எவ்வளவு பெரிய எதிரியையும் நம்மால் வெல்ல முடியும் என்ற நீதிக் கருத்தை இந்தக் கதை உணர்த்துகிறது.

மனிதர்களிலும், இந்தக் கொக்கைப்போல் நயவஞ்சகமாகப் பேசி சாமான்ய மக்களை ஏமாற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள நண்டைப் போல் தைரியமாக நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்றார்.

தாத்தா சொல்லும் கதைகள் 2

 கண்ணாடி தாத்தா தெருவில் நடந்து வருவதைப் பார்த்ததும் குழந்தைகள் உற்சாகமானார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளிக்கு விடுமுறை. அது மின்வெட்டு நேரம் என்பதால் குழந்தைகள் தொலைக்காட்சியில் அவர்களுக்கே உரிய அலைவரிசையைப் பார்க்க முடியவில்லை. வீடியோ கேம் விளையாடவும் வழியில்லை. கண்ணாடி தாத்தாவிடம் கதை கேட்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு அவரைப் பார்த்ததும் உற்சாகம் பிறந்தது. கண்ணாடி தாத்தாவுக்கு பஞ்சுப்பெட்டி போன்று தலைமுடி நரைத்துவிட்டது. அதிலேயும் தாத்தாவுக்கு ஏறுநெற்றி என்பதால் முன் நெற்றி வழுக்கையாகி இருந்தது. நெற்றியில் குங்குமமும் திருநீறும் துலங்க, தன் கண்ணாடியைக் கழற்றி தன் வேட்டியில் துடைத்து மீண்டும் மாட்டினார் கண்ணாடி தாத்தா. குழந்தைகளைப் பார்த்து நளினமாகக் கையசைத்தார். அவர்களும் தாத்தாவின் முன்னால் புல்வெளியில் வரிசையாக அமர, ஒருமுறை செருமி தன் குரலை சரிசெய்துகொண்டு கதை சொல்ல ஆரம்பித்தார் கண்ணாடி தாத்தா.

ஒரு ஊர்ல ஒரு அண்ணனும் தம்பியும் இருந்தாங்க. அவங்களுக்கு அந்த ஊர்ல சொந்தமா ஒரு ஏக்கர் நன்செய் நிலமும் ஒரு ஏக்கர் புன்செய் நிலமும் இருந்தது. நிலங்கள் எல்லாம் அவர்களின் தந்தையாரின் பராமரிப்பில் இருந்தது. ஒருநாள் தந்தையார் இறந்துவிட்டார். அவர் இறந்த பிறகு இருக்கிற சொத்தையும் வீட்டையும் அண்ணனும் தம்பியும் ஆளுக்குப் பாதியாக பங்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள்.
அண்ணன், மகா முரடன். தந்திரசாலி, பேராசை பிடித்தவன். உடல் பலமும் அதிகமுள்ளவன். அவனை எதிர்த்து யாரும் எதையும் பேசமுடியாது. ஏறுக்கு மாறு பேசுவான். ஆளும் ஆறடி உயரம் இருந்தான். உடம்பும் அதற்கேற்ற தன்மையுடன் இருந்தது. தம்பியோ, பாவம்... பைத்தியக்காரன் போல திரிவான். தம்பிக்கு மெலிந்த உடல்வாகு, அதற்கேற்ற உயரம்தான் இருந்தான். யாரிடமும் அதிகம் பேசமாட்டான். எல்லோரிடமும் அன்பு செலுத்துவான். அடுத்தவர்கள் பணத்துக்கு ஆசைப்பட மாட்டான். நேர்மையான சுபாவம் உள்ளவன்.

அப்பா இறந்த பிறகு தம்பிக்காரன் அண்ணனிடம் சென்று, ��அண்ணா, நம் தந்தையார் நமக்கு விட்டுச்சென்ற நிலங்களை எல்லாம் ஆளுக்குப் பாதியாக பிரித்துக் கொள்வோமே!�� என்று கேட்டான். அதற்கு அண்ணன்காரன் தம்பியிடம், ��தம்பி நாம் நிலங்களைப் பிரித்துப் பயிர் செய்தால் நம் நிலத்தின் பரப்பு குறைந்துவிடும். அக்கம்பக்கம் உள்ள நிலத்துக்காரர்கள் மோசமானவர்கள். வரப்பு, வாய்க்காலை வெட்டி, தங்கள் நிலத்துடன் சேர்த்துக்கொள்வார்கள். எனவே நாம் நிலத்தை இப்போதைக்கு பங்குவைக்க வேண்டாம். நாம் இருவரும் என்றும் போல ஒற்றுமையாய் நம் நிலத்தில் பயிர் செய்வோம். நிலத்தில் விளையும் மகசூலையும் ஆளுக்குப் பாதியாகப் பங்கிட்டு எடுத்துக்கொள்வோம்�� என்றான்.

அண்ணன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று நினைத்த தம்பிக்காரனும் �சரி� என்றான். அந்த வருடம் நன்கு மழை பெய்தது. ஆறு, குளங்களில் எல்லாம் நீர் நிறைந்து அலைமோதியது. எனவே அண்ணனும் தம்பியும் நன்செய் நிலத்தில் நெல் நடவு செய்து, உரம் போட்டு, களை எடுத்து, மருந்து அடித்து, நீர் பாய்ச்சி, நெல்லை விளையவைத்தார்கள். புன்செய் நிலத்தில் நிலக்கடலை எனப்படும் வேர்க்கடலையை விதைத்து, நன்கு பராமரித்து வந்தார்கள். நன்செய் நிலத்தில் நெற்பயிர் நன்றாக விளைந்து வந்தது. புன்செய் நிலத்திலும் நிலக்கடலை மகசூல் விளைந்துகொண்டிருந்தது. இரண்டு பயிர்களும் இன்னும் முழுமையாக விளையவில்லை.

அப்போது அண்ணன்காரன் தன் கொடூர முகத்தைக் காட்ட ஆரம்பித்தான். தம்பியை ஏமாற்றி, விளைந்த மகசூல் அனைத்தையும் தானே அபகரிக்க வேண்டும் என்று திட்டம் போட்டான். எனவே தம்பியை அழைத்து, ��தம்பி, நன்செய் நிலத்தில் விளைந்த பயிரில் மேல்பாதியை நான் வைத்துக் கொள்கிறேன். நெல் பயிரில் கீழ் பாதியை நீ வைத்துக் கொள். அதேபோல, புன்செய் நிலத்தில் விளையும் பயிரில் கீழ்ப்பகுதியை நான் வைத்துக்கொள்கிறேன். மேல்பகுதியை நீ வைத்துக்கொள்�� என்றான்.

�அண்ணன்காரன் நெல் மணிகளை தான் அபகரித்துக்கொண்டு, வைக்கோலை நம் தலையில் கட்டப்பார்க்கிறான். அதேபோல கடலைமணிகளை எல்லாம் அவன் வைத்துக்கொண்டு கடலைச் செடியின் இலை, தழைகளை எல்லாம் எனக்குக் கொடுக்கப்பார்க்கிறான். தானியங்கள் எல்லாம் அவனுக்கு; மாட்டுக்குப் போடும் தீவனங்கள் மட்டும் நமக்கா? அண்ணன், பேராசைப் பிடித்தவனாக இருக்கிறான். விளைந்த மகசூலில் பாதியை நாம் பெற வேண்டும். ஆனால் இப்போதைக்கு அவனிடம் சண்டை போடவும் கூடாது. ஆனான் அண்ணனுக்கு புத்தி புகட்டவும் வேண்டும்� என்று பலவாறு சிந்தித்த தம்பிக்காரன், கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான்.

அன்று பவுர்ணமி இரவில் முழுநிலவு வானத்தில் ஜொலித்தது. தம்பிக்காரன் நடுஜாம நேரத்தில் எழுந்து, கையில் ஒரு பன்னருவாளுடன் புன்செய் காட்டுக்குச் சென்றான். அங்கு விளைந்திருந்த கடலை மகசூலில் தரைக்கு மேல் உள்ள இலை, தழைகளை ஒரு பாத்தி அளவுக்கு அறுத்து எடுத்து, ஒரு கட்டாகக் கட்டி கொண்டுவந்து வீட்டு முற்றத்தில் போட்டான்.

மறுநாள் காலையில் பொழுது பொல பொலவென்று விடியும்போது படுக்கையில் இருந்து எழுந்த அண்ணன்காரன், கண்களைக் கசக்கிக்கொண்டு முகம் கழுவுவதற்காக கையில் ஒரு செம்பு தண்ணீருடன் வீட்டு முற்றத்துக்கு வந்தான். அங்கே கடலைச் செடியின் இலைகள், தழைகள் அடங்கிய கட்டு கிடந்தது. அதைப் பார்த்து அதிர்ந்த அண்ணன்காரன், தம்பி படுத்துக்கிடக்கும் இடத்துக்குச் சென்று அவனை எழுப்பினான். ��தம்பி, என்ன கூத்து இது? யார் செய்த காரியம்? நம் புன்செய் காட்டில் உள்ள கடலை தழைகளை எல்லாம் யாரோ அறுத்துவந்து நம் வீட்டு முற்றத்தில் போட்டு இருக்கிறார்கள். இன்னும் நன்கு முற்றி விளையாத நிலையில் இப்படி தழையை அறுத்துவிட்டால், பூமிக்குள் பிஞ்சாக இருக்கும்  கடலை எப்படி மணி பிடித்து விளையும்? மேலே இலை, தழை இல்லாத கடலைப் பயிரை எப்படி பூமியில் இருந்து வெளியே எடுக்க முடியும்? எந்த மடையன் செய்த காரியம் இது?�� என்று காச் மூச் என்று கோபத்துடன் கத்தினான்.

அண்ணன் இப்படி அதிகாலை நேரத்தில் கத்துவான் என்று எதிர்பார்த்த தம்பிக்காரன், தன் படுக்கையை விட்டு எழுந்துவது, ��அண்ணா, ஆத்திரப்படாதே. நீதானே புன்செய் காட்டில் விளையும் மகசூலில் மேல்பாதி எனக்கு என்று சொன்னாய். அதனால்தான் காட்டுக்குச் சென்று எனக்கு உரிய பங்கை நான் அறுவடை செய்திருக்கிறேன்�� என்றான் அமைதியாக.
��தம்பி, கடலை பயிரில் மேல்பாதியை அறுத்துவிட்டால், கீழ்பாதியில் உள்ள மகசூல், பிஞ்சாக, விளையாமல் பொக்காகி விடுமே�� என்று பரிதாபமாகக் கேட்ட அண்ணன்காரனுக்கு, �நாம் தம்பியை ஏமாற்றி முழு மகசூலையும் அபகரிக்க நினைத்தது தப்புதான். தம்பி புத்திசாலி என்பதால் நம்மை எதிர்த்துப் பேசாமல், தர்க்க முறையில் காரியத்தை செய்துகாட்டி, மறைமுகமாக நமக்குப் புத்தி புகட்டுகிறான். இனியும் இவனை ஏமாற்ற முடியாது� என்பது புரிந்தது.

அவனை, உண்மையான பாசத்துடன் ��தம்பி�� என்று அழைத்து, ��என்னை மன்னித்துவிடு. நான் என் தவறை உணர்ந்துகொண்டேன். முதலில் உன்னை ஏமாற்றி உனக்கு உரிய பங்கை அபகரிக்க நினைத்தது தப்புதான் என்பதை இப்போது நானும் புரிந்து கொண்டேன். இனிமேல் நமக்குள் சண்டை, சச்சரவு வேண்டாம். நன்செய், புன்செய் ஆகிய இரண்டு நிலத்திலும் விளைந்து வரும் எல்லா மகசூல்களிலும் ஆளுக்குப் பாதியாக நாம் இருவரும் பங்கு வைத்துக்கொள்வோம்�� என்றான்.

தம்பிக்காரன், அண்ணனுக்கு இந்த மட்டிலாவது புத்தி வந்ததே என்று நினைத்து சந்தோஷமாகத் தலையை ஆட்டினான்!

குழந்தைகளே... இந்தக் கதையில் வரும் பேராசைப் பிடித்த அண்ணன்காரனைப் போல யாரும் இருக்கக்கூடாது. நம்மை ஏமாற்றி யாராவது நம் பங்கை திருட நினைத்தால் நம் அறிவைக்கொண்டு யோசித்து, நம் உடைமைகளை அவர்களிடம் இருந்து காத்திட வேண்டும். இதைத்தான் திருவள்ளுவரும் �அறிவு அற்றம் காக்கும் கருவி�� என்று கூறுகிறார். நமக்கு சோதனை வரும்போது நாம் அறிவு என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்து போராட வேண்டும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்.

தாத்தா சொல்லும் கதைகள் 1

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் என்ற சிற்றூரில் வசித்து வருகிறார். �கதை சொல்லி� என்ற காலாண்டிதழின் பொறுப்பாசிரியர். நாட்டுப்புறவியல் சார்ந்து இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார்.

கி.ராஜநாராயணன் கரிசல் காட்டு கதை சொல்லி என்றால், கழனியூரன் செவக்காட்டு கதை சொல்லி. சிறந்த களப்பணியாளர். இவரின் படைப்புகள் பலவும் களப்பணியின் மூலம் திரட்டிய தரவுகளால் உருவானவையே. கி.ரா.வின் சீடர் என்றும், கி.ரா.வின் வாரிசு என்றும் இலக்கிய உலகம் இவரை அழைக்கிறது.


பொங்கல் பண்டிகை பிறந்த கதை

- கழனியூரன்

பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒவ்வொரு பண்டிகைக்குப் பின்னாலும் ஒரு செய்தி அல்லது கதை நிச்சயமாக இருக்கும். ஆனால், நாளா வட்டத்தில் பண்டிகைகளின் முகம் மாறும்.

ஒரு குழந்தையின் முகத் தோற்றம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே இருப்பதைப் போல, பண்பாடு, கலாசாரம் சார்ந்த பண்டிகைகளின் முகமும் மாறிக்கொண்டே இருக்கும்.

பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் முதன்மையான பண்டிகை. ஆதி தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் பண்டிகை வேறு, இன்றை தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை வேறு.

�மாற்றம் ஒன்றுதான் மாறாதது� என்று சொல்வார்கள். மாற்றம் என்பது உண்மையானது. ஆனால், அந்த மாற்றம் இயல்பாக நடைபெற வேண்டும்.

ஒரு சிற்பத்தின் மேல் தடவப்படும் வண்ணங்களால் ஏற்படும் மாற்றம் என்பது வேறு. சிற்பத்தின் உருவ அமைப்பையே மாற்றுவது என்பது வேறு.

இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் பொங்கல் பண்டிகையில் உண்மையான தத்துவார்த்தத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாம் உண்ணும் உணவில், உடுத்தும் உடையில், அணியும் ஆபரணங்களில், இன்று பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதைப் போலவே, நமது கலாசாரம், பண்பாடு சார்ந்த பண்டிகைகளிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் முதன்மையான பண்டிகையாகும். இயற்கையை மிக இயல்பாக வழிபடும் பண்டிகையாகும்.

சூரிய சக்திதான் உலகில் முதன்மையான சக்தியாகும். எனவேதான் இளங்கோ அடிகள், தன் இயற்கை வழிபாட்டில், �ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்...� என்று பாடினார்.

சூரிய ஒளியில் இருந்தான், தாவரங்கள் சக்தி பெறுகின்றன. உழவனுக்கு சூரிய சக்தி மூலமே உணவு கிடைக்கிறது என்பது தெரிந்திருக்கிறது. எனவே தமிழர்கள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்க விரும்பி பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினார்கள்.

பூமி, தண்ணீர், காற்று, சூரிய சக்தி, மனித உழைப்பு & இவைகள் மூலமே உழவனுக்கு வருவாய் கிடைக்கிறது.

தன் பூமியில் விளைந்த நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியை பொங்கலாகச் சமைத்து உழவர்கள்  பொங்கல் அன்று சூரியன் உதிக்கும் போது படையலாகப் படைத்து இயற்கையின் மூல சக்தியான சூரியனை வழிபட்டார்கள்.

தன் வயலில் விளைந்த கரும்பு, மஞ்சள் மற்றும் காய்கறிகளையும், பூக்களையும், கிழங்குகளையும், கனிகளையும் இயற்கையின் முன் படைத்து இயற்கையை வழிபட்ட தமிழர்களின் பண்டிகைதான் பொங்கல்.

யாகம் வளர்ப்பது அதில் தாணியங்களை அள்ளிப் போடுவது, அக்னியில் நெய் வார்ப்பது போன்ற வழிபாட்டு முறைகள் பொங்கல் அன்று நடைபெறுவது இல்லை.

பொங்கலையும், காய்கறிகளையும் ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொண்டும், உறவுகளை மேம்படுத்திக்கொள்ளும் அன்புப் பண்டிகையாகும் பொங்கல்.

வீர விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் மூலம் தமிழர்களின் வீரத்தை வெளிக்காட்டும் பண்டிகையாகவும் பொங்கல் திகழ்கின்றது.

இன்று பொங்கல் பண்டிகை மிகவும் செயற்கையாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ் புத்தாண்டின் துவக்கம் �தை� மாதத்தில் இருந்தே துவங்கியது. �தை பிறந்தால் வழி பிறக்கும்� என்பது பழமொழி.

பொங்கல் பண்டிகைக்குப் பின்னாலும் ஒரு சொல் கதை உள்ளது.

�சொல் கதைகளுக்கு கண்ணும் கிடையாது. காதும் கிடையாது� என்று கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள் சொல்வார்கள். சொல் கதைகளை அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் அணுகவேண்டும்.

பிறந்த நாள் கொண்டாடும் வழக்கம், வெள்ளைக்காரர்களிடம் இருந்துதான் வந்தது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதி தமிழர்களிடமும் பிறந்த நாள் கொண்டாடும் பழக்கம் இருந்தது என்பதை இந்தச் சொல் கதை உறுதி செய்கிறது.

அந்தக் காலத்தில் தமிழர்களின் வருசப் பிறப்பு �தை� மாதத்தில் இருந்தே துவங்கி இருக்கிறது.

தை, மாசி, பங்குனி, சித்திரை முதலிய பன்னிரண்டு மாதங்களுக்குள்ளும் ஒரு நாள் சண்டை வந்தது. ஒவ்வொரு மாதமும் �நான்தான் தமிழ் வருசத்தின் முதல் மாதமாக இருப்பேன்� என்று கூறியதாம்.

யார், யாரெல்லாமோ வந்து மாதங்களின் சண்டையைத் தீர்த்து வைக்க முயற்சி செய்தார்களாம். ஒவ்வொரு மாதமும் என்னில் இருந்துதான் தமிழ் வருசப் பிறப்பு தோன்ற வேண்டும் என்பதற்கு ஆளுக்கு ஒரு காரணத்தைக் கூறியதாம்.

பூமியில் யாராலும், மாதங்களுக்குள் நடைபெற்ற சண்டையைத் தீர்த்துவைக்க முடியவில்லை.

கடைசியில் மாதங்கள் அனைத்தும் அணிவகுத்து கடவுளிடம் சென்று தங்கள் வழக்கைக் கூறின.

கடவுள் ஒவ்வொரு மாதங்களின் தனிச் சிறப்பையும் கேட்டு, �வருடத்தின் முதல் மாதமாக இருக்கும் தகுதி தை மாதத்திற்கே இருக்கிறது� என்று தீர்ப்புக் கூறினார்.

கடவுளே சொன்னதால் மற்ற மாதங்கள் எல்லாம், தை மாதத்தையே, வருசத்தின் முதல் மாதமாக ஏற்றுக்கொண்டன.

கடவுள் தை மாதத்தைப் பார்த்து �� உனக்கு ஏதாவது ஆசை இருந்தால் சொல் அதை நிறைவேற்றி வைக்கிறேன்�� என்றார்.

தை மகள், கடவுளிடம் �என் (தை மாதத்தின்) முதல் நாளை (தமிழ் வருசப் பிறப்பு நாளை) அதாவது தமிழ் வருடத்தின் பிறந்தநாளை மக்கள் எல்லாம் ஒரு விழாவாகக் கொண்டாட வேண்டும்�� என்ற வேண்டுகோளை வைத்தாள்.

கடவுளும் தை மகளின் வேண்டுகோளை ஏற்று �தை முதல் நாளை (தமிழ் வருசப் பிறப்பு நாளை) இனி மேல் தமிழர்கள் யாவரும் பொங்கல் விழாவாகக் கொண்டாடுவார்கள்� என்று சொன்னார்.

வருசம் தன் பிறந்தநாளைக் கொண்டாட ஆரம்பத்தில் இருந்துதான், மனிதர்களும் தன் பிறந்த நாளைக் கொண்டாட ஆரம்பித்தார்கள் என்று பொங்கல் பண்டிகை பற்றிய சொல் கதையைக் கூறினார், கதை சொல்லி ஒருவர்.

பொங்கல் பண்டிகை, உழவர்களின் திருநாளாகக் கொண்டாடப் படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய துணி, மணிகளையும், கழிவான பொருட்களையும் அழித்து சுற்றுச்சூழலை மேம்படுத்துகிறது போகிப் பண்டிகை.

�சுற்றுச்சூழல் சார்ந்த இதுபோன்ற பண்டிகையை உலகத்தில் மக்கள் வேறு எங்காவது கொண்டாடுகிறார்களா?� என்று தெரியவில்லை. �போகி� என்பது பொங்கலோடு தொடர்புடைய சூழல் அறிவியல் சார்ந்த பண்டிகையாகும்.

பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தன் உழவுத் தொழிலுக்கு உதவிய வாயில்லாத ஜீவன்களுக்கும் ஒரு பண்டிகையை தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்.

�மாடுகளுக்கு என்று ஒரு தனிப் பண்டிகையை வேறு எந்த மாநிலத்தவர்களாவது கொண்டாடுகிறார்களா?� என்று எனக்குத் தெரியவில்லை.

உழவுதான் தமிழர்களின் முக்கியமான தொழில். எனவேதான் உழவர்களின் பண்டிகையாகவும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. �அறுவடைத் திருநாள்� என்ற பெயரும் பொங்கல் பண்டிகைக்கு உள்ளது.

�அறுவடை நாளை� திருநாளாகக் கொண்டாடும் மரபு உலகில் பல நாடுகளில் இன்றும் நடைமுறையில் உள்ளது.

தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த பண்பாடு சார்ந்த பண்டிகைகளின் வரலாற்றை இன்றைய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இன்று தமிழகம் பல இனக்குழு மக்களின் கலவைக்கூடமாகத் திகழ்கின்றது. அறிவியல் வளர்ச்சியில் பன்னாட்டு வணிக வரவால் தமிழகத்தின் முகம் மாறிவிட்டது. எனவே, பொங்கல் போன்ற ஆதி பண்டிகைகளின் வடிவமும் சிதைந்துவிட்டது. பொங்கல் பண்டிகைக்குள்ளும் செயற்கைத் தன்மைகள் புகுந்து விட்டது. இனி அதை யாரும் மீட்டுருவாக்கம் செய்ய முடியாது. என்றாலும் எஞ்சிய வடிவத்தையாவது மேலும் சிதையாமல் காத்திட நாம் முயல வேண்டும்.

நகரங்களில் குக்கரில் பொங்கல் வைத்து, பக்கத்துக்கடையில் ஒரு கொலை மஞ்சளும், ஒரு துண்டு கரும்பும், வழக்கத்துக்கு மாறாக கூடுதலாக கொஞ்சம் அதிகமாக காய்களும், கிழங்குகளும் வாங்கி பொங்கல் பொங்கியாச்சு என்று உறவினர்களிடம் செல் பேசியில் பேசி மகிழ்ந்துவிட்டு, பொங்கல் என்ற விடுமுறை நாளை தொலைக்காட்சியின் முன் அமர்ந்து பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி முடித்துவிடுகிறார்கள்